ஆமைகள் பற்றி இதுவரை அறிந்திடாத வியக்கவைக்கும் பின்னணி!

கடல் ஆமைகள் ஒரு அற்புதமான ஊர்வன வகையை சார்ந்தவை, இதுவரை அந்த இனங்களை பற்றி நாம் பெரிதும் அறிந்திடாத சில விஷயங்களை காண்போம்.

 

1 /5

பொதுவாக கடல் ஆமைகளில் பச்சை கடல் ஆமைகள் கொஞ்சம் தனித்துவமானது, இவை தாவர வகைகள், கடல் பாசிகள் மற்றும் கடலிலுள்ள புற்களை சாப்பிடுகின்றது, இதனை சாப்பிடுவதால் தான் அவை பச்சை நிறமாக காட்சியளிக்கிறது.  

2 /5

கூட்டின் வெப்பநிலையை பொறுத்து கடல் ஆமைகளின் பாலினம் தீர்மானிக்கப்படுகிறது, குளிர்ச்சியான வெப்பநிலை ஆண் ஆமைக்குஞ்சுகளையும், வெப்பமான வெப்பநிலை பெண் ஆமைக்குஞ்சுகளையும் உருவாக்குகிறது.  

3 /5

பெரும்பாலான ஆமையினங்கள் இரவில் தான் கூடு காட்டும் ஆனால் கெம்பஸ் ரிட்லிகள் எனப்படும் ஆமை வகை மட்டும் பகலில் கூடு காட்டுகிறது.  

4 /5

மற்ற ஆமைகளை போல கடல் ஆமைகள் ஏதேனும் ஆபத்து வந்தால் உடனே தனது ஓட்டிற்குள் சென்றுவிடாது, அவை வேகமாக நீந்தும் திறனை பெற்றிருப்பதால் உடனே வேகமாக தப்பித்துவிடும்.  

5 /5

கடல் ஆமைகள் வழக்கமாக ஒரு கூட்டிற்கு சுமார் 100 முதல் 125 வரையிலான முட்டைகளை இடுகின்றது, மேலும் இவை அடிக்கடி கூடு காட்டுகிறது.