Thriller Books With Amazing Plot Twist : சில த்ரில்லர் புத்தகங்கள் படிக்க படிக்க ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கும். அவை என்னென்ன தெரியுமா?
Thriller Books With Amazing Plot Twist : புத்தகம் படிப்பது, நல்ல பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும், கதை சொல்லும் நாவல்கள் கற்பனை வளத்தை அதிகரிக்கும். ஒரு சில த்ரில்லர் புத்தகங்கள், நம்மை ஆச்சரியப்பட வைக்கும், பின்னர் அதிர்ச்சியளிக்க வைக்கும். அந்த வகையான இங்கு சில புத்தகங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
தி ட்ராப்: கேத்ரீன் ர்யான் ஹவார்ட் எழுதியிருக்கும் த்ரில்லர் புத்தகம், தி ட்ராப். டப்ளின் எனும் ஊரில் வாழும் பெண்ணை சுற்றி நிகழும் கதை இது.
தி சைலண்ட் பேஷண்ட்: தி சைலண்ட் பேசண்ட் நாவலை, அலெக்ஸ் எழுதியிருக்கிறார். 2019ஆம் ஆண்டு வெளியான புத்தகம் இது. நல்ல த்ரில்லர் புத்தகத்தை படிக்க நினைத்தால், இதை படியுங்கள்.
தி நைட் ஷீ டிஸ்ஸப்பியர்ட் : லிஸா ஜெவல் எழுதியிருக்கும் புத்தகம் இது. கான் கேர்ள் புத்தகத்தை அடுத்து வெளியான இது, மக்களை பெரிதும் கவர்ந்தது. இந்த கதையும், ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் த்ரில்லர் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டதாகும்.
தி ஹவுஸ் அக்ராஸ் தி லேக்: தி ஹவுஸ் அக்ராஸ் தி லேக் புத்தகத்தை, ரைலி சேஜர் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் 2022ஆம் ஆண்டு வெளியானது.
சம்டைம்ஸ் ஐ லை: இந்த புத்தகத்தை அலைஸ் ஃபீனீ எழுதியிருக்கிறார். இது, 2017ஆம் ஆண்டு வெளியானது.
லாக் எவ்ரி டோர்: லாக் எவ்ரி டோர் புத்தகத்தை, ரைலி சேஜர் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் ஜூல்ஸ் என்ற பெண்ணை சுற்றி நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
ஐ லெட் யூ கோ புத்தகத்தை, க்ளார் மாக்கிண்டாஷ் எழுதியிருக்கிறார். இது ஒரு சைக்காலஜி மிஸ்டரி புத்தகம் ஆகும்.
டு நாட் டிஸ்டர்ப் புத்தகத்தை ஃப்ரீட மேக் ஃபேடன் எழுதியிருக்கிறார். சைக்காலஜி த்ரில்லர் புத்தகமான அது, நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதனை கண்டிப்பாக த்ரில்லர் புத்தக விரும்பிகள் பார்க்கலாம்.