வேற்றுகிரகவாசிகளின் தொழில்நுட்பத்திலிருந்து மனிதர்களுக்கு லாபம் உண்டா? ஆய்வு

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட டாக்டர் கேரி நோலன், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பிரபல நோயெதிர்ப்பு நிபுணர் மற்றும் பேராசிரியர் ஆவார். அவர்,  மன்ஹாட்டனில் சமீபத்தில் நடந்த மாநாட்டில், ஏலியன்கள் இருப்பதற்கான சாத்தியம் "100 சதவிகிதம்" என்று கூறுகிறர். 

மனிதர்களாக மாறுவேடமிட்டு நம்மிடையே கலப்பதற்குப் பதிலாக, வேற்று கிரகவாசிகள் பெரும்பாலும் இடைத்தரகர்களகவோ அல்லது அதிநவீன நுண்ணறிவைப் பயன்படுத்துவார்கள் என்று டாக்டர் நோலன் நம்புகிறார். 

1 /7

2 /7

தென் அமெரிக்க பழங்குடியினரின் ஸ்பானிஷ் கப்பல்களின் முதல் பார்வையுடன் வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்புகளை சுட்டிக்காட்டும், டாக்டர் நோலன், இந்த உயிரினங்களின் உண்மையான தன்மையை உணராதபோது, ஏலியன்களை மனிதர் சந்தித்திருக்கலாம் என்று கணிக்கிறார்

3 /7

ஏலியன்கள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் என்றும், வேற்று கிரக படையெடுப்புகள் அல்லது கடத்தல்கள் பற்றிய கருத்துகள் தவறு என்றும் அவர் கருதுகிறார். 

4 /7

பூமியில் விட்டுச் செல்லப்பட்ட எந்தவொரு வேற்றுகிரகவாசிகளின் தொழில்நுட்பத்திலிருந்து மனிதர்கள் எவ்வாறு லாபம் பெறலாம் என்பதைக் கண்டுபிடிப்பதில் தனது கவனம் உள்ளது என்பதை வலியுறுத்தினார்.

5 /7

சிஐஏ உடன் இணைந்து செயலாற்றுவதாக கூறிய நோலன், நோயெதிர்ப்பு திறன்களைப் பயன்படுத்தி மர்மமான வான்வழி நிகழ்வுகளுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படும் மருத்துவ சிக்கல்களை ஆய்வு செய்தார்.

6 /7

2016 ஆம் ஆண்டில் கியூபாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட "ஹவானா சிண்ட்ரோம்" பாதித்த நோயாளிகளால் வெளிப்படும் அறிகுறிகளுக்கும், வெளிநாட்டில் நிலைகொண்டிருந்த ஏராளமான அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளை நோலன் வலியுறுத்தினார்.

7 /7

ரோஸ்வெல் நிகழ்வைப் போன்ற திட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறும் நோலன், செயலிழந்த யுஎஃப்ஒக்களை மீட்டெடுப்பது மற்றும் அவற்றின் அதிநவீன தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து மீண்டும் உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஆர்வம் காட்டுகிறார்