டெபாசிட்களுக்கான வட்டி உயர்வு... எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தெரியுமா?

ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்திய நிலையில், வங்கிகளால் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வங்கிகளில் நிலையான வைப்புதொகைக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பயன்பெறுவார்கள். இந்நிலையில், நிலையான வைப்புத்தொகையின் வட்டி விகிதங்களை மாற்றியமைத்த வங்கிகள் குறித்த இங்கு காண்போம். 

  • Feb 19, 2023, 13:31 PM IST

 

 

 

 

 

1 /4

பாரத ஸ்டேட் வங்கி: பொதுக்கடன் வழங்குவதில் இந்தியாவின் மிகப்பெரிய சேவையை அளித்துவரும் எஸ்பிஐ, மொத்த கால வைப்பு விகிதங்களை 25-75 bps வரை அதிகப்படுத்தியுள்ளது. அதன்படி, பிப்ரவரி 15, 2023 முதல், சில்லறை உள்நாட்டு டெபாசிட்கள் (ரூ. 2 கோடிக்குள்) மாற்றத்திற்கு உட்பட்டவை. 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை, வங்கி 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை விகிதங்களை வழங்குகிறது.

2 /4

ஐசிஐசிஐ வங்கி: தனியார் வங்கியான இதில், பெரிய நிலையான வைப்புத்தொகைகளின் வட்டி விகிதங்களை ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. விகிதங்கள் 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை குறையும். மிகச் சமீபத்திய வைப்புத்தொகை வட்டி விகிதங்கள் கடந்த பிப்.7ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

3 /4

ஆக்சிஸ் வங்கி: 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி முதல்,  ஆக்சிஸ் வங்கியும் இதேபோல் ரூ.2 கோடிக்குக் குறைவான வைப்புதொகை வட்டி விகிதங்களை உயர்த்தியது. தனியாரில் மிகப்பெரிய கடன் வழங்குபவராக உள்ள ஆக்சிஸ் வங்கி, தற்போது 3.50 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை விகிதங்களை வழங்குகிறது.

4 /4

இன்டஸ்இன்ட் வங்கி: 2 கோடிக்கு கீழ் உள்ள வைப்புத்தொகை வட்டி விகிதங்களை இன்டஸ்இன்ட் உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது, இன்டஸ்இன்ட் வங்கியானது 7 நாட்கள் முதல் 61 மாதங்கள் அல்லது அதற்கும் அதிகமான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 3.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வழங்குகிறது. இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு, இந்த வங்கி மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு அதிகபட்சமாக 7.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதமும் வழங்குகிறது. கடந்த பிப். 16ஆம் தேதி முதல் இந்த விகிதங்கள் நடைமுறைக்கு வரும்.