சமீபத்தில் வைரலான கிரீன் இந்தியா சேலஞ்சைப் போலவே தற்போது மூக்குத்தி சேலஞ்ச் முன்னணி நடிகைகள் மத்தியில் வைரலாகி வருகிறது..!
சேலஞ்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது முளைத்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை மையமாகக் கொண்டு இப்பொழுது புதிய சேலஞ்ச் ஒன்று உருவாகியுள்ளது.
மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா போட்டிருக்கும் ஜொலி, ஜொலிக்கும் மூக்குத்தியை போலவே பிரபல நடிகைகளும் சோசியல் மீடியாவில் மூக்குத்தியுடன் போஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
நடிகைகள் அதுல்யா ரவி, மேகா ஆகாஷ், இஷா ரெப்பா, வாணி போஜன், ஆத்மீக என பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.