தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எவ்வளவு கோடி தெரியுமா?

Tamanna bhatia Salary: பல ஆண்டுகளாக இந்திய சினிமாவில் நடிகையாக இருந்து வரும் தமன்னாவின் மார்க்கெட் கடந்த ஆண்டு மீண்டும் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.

 

1 /5

கடந்த 2006 -ம் ஆண்டு தமிழில் வெளியான கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் தமன்னா.  இந்த படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.    

2 /5

பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தார் தமன்னா. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸில் கிளாமராக நடித்திருந்தார்.  

3 /5

ஜெயிலர் படத்தில் காவலா பாடலில் நடனம் ஆடி இருந்தார் தமன்னா.  இந்த பாடல் மிகப்பெரிய அளவு ஹிட் ஆனது.  மீண்டும் கோலிவுட்டில் நுழைய இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.    

4 /5

மேலும் பாலிவுட்டில் இதுவரை அவர் நடித்திடாத புதிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தொடங்கி உள்ளார்.  இதனால் தற்போதுள்ள 2K கிட்ஸ்களும் தமன்னாவின் ரசிகர்களாக மாறி உள்ளனர்.  

5 /5

ஒரு படத்திற்கு 2 கோடிக்கும் கம்மியாக சம்பளம் வாங்கி கொண்டிந்த தமன்னா, தற்போது 5 கோடி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.