30 ஆண்டுக்குப் பின் சனி ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு உச்ச ராஜயோகம்

Sani Peyarchi Palan 2023: திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி, இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.

நீதியின் கடவுளான சனி பகவான் திருநள்ளாறு ஆலயத்தின் படி வரும் டிசம்பர் 20ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி, இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது. எனவே சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1 /6

மேஷம்: சனிபகவானின் அருளால் புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பு உண்டாகும். அதுமட்டுமின்றி நீங்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களால் அமோக லாபம் பெறுவீர்கள். 

2 /6

ரிஷபம்: சனி பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைவதால், நீங்கள் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு நல்ல நேரம் கூடி வந்துள்ளது. 

3 /6

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனி நடைபெறும் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சி உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறது. சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். 

4 /6

கன்னி: இந்த சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். வெற்றிகள் தேடி வரும். 

5 /6

தனுசு: இந்த சனிப் பெயற்சிக்கு பிறகு உங்களின் கஷ்டங்கள், கவலைகள் நீங்கும். இதுநாள் வரை பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. குழந்தை பாக்கியம் உண்டாகும். உயர் பதவி யோகம் உங்களை தேடி வரும். புதிய தொழில் அமையும். இனி உங்களுக்கு முழுமையான ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.