Adipurush: ‘இந்த படம் எனக்கு அடிச்ச லக்..’ ஆதிபுருஷ் படவிழாவில் நடிகர் பிரபாஸ் பேச்சு!

இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக கருதப்படும் ஆதிபுருஷ் படத்தில் நாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடித்துள்ளார். 

Adipurush Pre-release event: இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக கருதப்படும் ஆதிபுருஷ் படத்தில் நாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடித்துள்ளார். 

1 /9

உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள படம், ஆதிபுருஷ். இந்த படத்திற்காக ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்போடு உள்ளனர். 

2 /9

இராமாயண கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராமனாக பிரபாஸ் நடிக்கிறார். சீதாவாக கிருத்தி சனோன் நடிக்கிறார். 

3 /9

பான் இந்தியா அளவில் வெளியாகும் இப்படம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது. 

4 /9

ஆதிபுருஷ் படவிழா, நேற்று திருப்பதியில் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர். 

5 /9

பிரபாஸ், கிருத்தி சனோனை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். விழா மேடையேறி பேசிய பிரபாஸ், “ஆதிபுருஷ் படம் தனக்கு கிடத்தது அதிர்ஷம்” என்று கூறினார்.

6 /9

ரசிகர்கள் பிரபாஸை அதிகம் பேச சொல்வதாக கூறிய அவர், “இனி அதிகம் பேசமாட்டேன். ஆனால் வருடத்திற்கு 2-3 படங்களில் நடிப்பேன்” என கூறினார். 

7 /9

ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலர் குறித்த மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

8 /9

இந்த புது ட்ரைலர் பார்ப்பதற்கு வீடியோ கேம் போல இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். 

9 /9

வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ள ஆதிபுருஷ் படம், போட்ட அதிக பட்ஜெட்டை மீண்டும் எடுக்குமா என்பது வர வர கேள்விக்குறியாகி வருகிறது.