துஷ்பிரயோகம் முதல் ஆதிக்க மனப்பான்மை என பல பிரபலங்களின் சில விஷயங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சியூட்டும் பிரபலங்களின் வெளிப்பாடுகள் நமது சிந்தனையை தூண்டுகிறது.
சமீபத்தில், இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் பிரபல ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இங்கிலாந்து அரசக் குடும்பத்தைப் பற்றி வெளிப்படுத்திய செய்திகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.
பல ஆண்டுகளாக, பல பிரபலங்கள் சில இருண்ட உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர், அவை உலகிற்கே அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அவற்றில் சில…
Also Read | நூதனமான முறையில் டிரக்கில் வொயின் பாட்டில்கள் Smuggling Video
அமெரிக்காவில் ஆசியர்களை அவமானப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. பிரியங்கா சோப்ரா உயர்நிலைப் பள்ளி படிக்கும்போது தனது 16 வயதில் இனவெறி கொடுமைப்படுத்துதலை எதிர்கொண்டது பற்றி சமீபத்தில் தெரிவித்தார். அதனால்தான் அப்போது அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார். ஓப்ரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டியில் இந்த நிகழ்ச்சி பற்றி பிரியங்கா விரிவாகக் கூறினார். (Photograph:Twitter)
மேகன் மார்க்லும் இளவரசர் ஹாரியும் பிரபலமான ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அரச கடமைகளில் இருந்து பின்வாங்குவதற்கான முடிவு மற்றும் அதற்கு வழிவகுத்த சில அதிர்ச்சியூட்டும் விவரங்களை வெளிப்படுத்தினர். அவர்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தற்கொலை எண்ணங்கள் இருப்பதாக மேகன் ஒப்புக்கொண்டது தான். அதேபோல் நிறம் குறைவாக இருக்கும் தங்கள் மகன் ஆர்ச்சியை எப்படி இளவரசராக்குவது என்ற காலையையும் அந்த பேட்டியில் மேகன் தெரிவித்திருந்தார். (Photograph:AFP)
கெய்ட்லின் ஜென்னர் அதிகாரப்பூர்வமாக 2015ஆம் ஆண்டில் பெண்ணாக மாறினார். ஆனால் அவர் ஏப்ரல் 2015 இல் டயான் சாயருக்கு பேட்டியளித்தபோது தான் அந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். தான் ஒரு பெண்ணாக அடையாளம் காணப்பட்டதாகவும், மாற்றத்தை உருவாக்கும் செயல்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். (Photograph:Twitter)
கிறிஸ்டன் ஸ்டீவர்ட் மற்றும் ராபர்ட் பாட்டிசன் ஆகிய இருவரும் 'ட்விலைட்' திரைப்பட வெளியீட்டின் போது ஒன்றாக இருந்தபோது, அவர்கள் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமானார்கள். பின்னர் ஒரு நாள், கிறிஸ்டன் ஸ்டீவர்ட் தனது இதயத்தை வெளிப்படுத்தினார். அந்த ஜோடி முத்தமிடும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகின. அதையடுத்து இயக்குனர் ரூபர்ட் சாண்டர்ஸுடன் பாட்டின்சனை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டார். அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலத்தில், ஸ்டீவர்ட் இவ்வாறு தெரிவித்தார்: “இந்த தருணம் கண்மூடித்தனமானது என் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயத்தை, நான் மிகவும் நேசிக்கும் மற்றும் மதிக்கும் நபர் நான் மிகவும் வருந்துகிறேன்” என்று தெரிவித்திருந்தார். "கிறிஸ்டன் இப்போது bisexual என்று அறியப்படுகிறார். (Photograph:Twitter)
டேவிட் லெட்டர்மேன் சில ரகசியங்களை வைத்திருக்கிறார். பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான அவர், அக்டோபர் 2009 இல் தனது சிபிஎஸ் லேட் ஷோவில் தனது ஊழியர்களில் பல பெண் உறுப்பினர்களுடன் உடலுறவு கொண்டதை வெளிப்படுத்தினார். தன்னிடம் 2 மில்லியன் டாலர் பணத்தை மிரட்டி பறித்ததையும் அவர் வெளிப்படுத்தினார்.
கிராமி விருது வென்ற நாட்டுப்புற பாடகி ஷானியா ட்வைன் தனது 2011 ஆம் ஆண்டு நினைவுக் குறிப்பான 'ஃப்ரம் திஸ் மொமென்ட் ஆன்' எழுதும் போது குழந்தை பருவத்தில் எதிர்கொண்ட கொடுமைகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். 14 வயதாக இருந்தபோது, தனது தாயின் இரண்டாவது கணவரால், தானும் தனது தாயும் எவ்வாறு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதை குறிப்பிடிருந்தார். பாதிப்பை எதிர்கொண்ட அவர் ஒரு கட்டத்தில் குரலை இழந்து, பிறகு மீண்டு வந்ததையும் குறிப்பிட்டார். (Photograph:Twitter)