Tamannaah Salary : தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடி தெரியுமா?

Tamannaah Salary : இந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழி படங்களிலும் நடித்து பிரபலமடைந்திருக்கிறார். இவர், ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

Tamannaah Salary : பாலிவுட்டில் முக்கிய நடிகையாக இருக்கும் தமன்னா, தென்னிந்திய அளவில் பல ஹிட் படங்களில் நடித்த நடிகையாகவும் இருக்கிறார். தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு தொடர்ந்து முன்னணி நடிர்களுக்கு ஜோடியாக அவர்களின் படங்களில் நடித்து பிரபலமாகி விட்டார். சமீபத்தில், சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில் இவர்தான் பேய் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தமன்னா வாங்கியிருந்த சம்பளமும், அவர் தற்போது வாங்கி வரும் சம்பளமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

தமன்னாவிற்கு தமிழ் திரையுலகில் பெரிய மார்கெட்டை தேடிக்கொடுத்த படம், படிக்காதவன். இந்த படம் பெரிய ஹிட் அடிக்க, தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். 

2 /8

தமிழ், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருந்தாலும், தமன்னா இந்தியிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

3 /8

பாகுபலி படத்தின் 2 பாகங்களும் இவருக்கு உலகளவில் அங்கீகாரத்தை தேடித்தந்தது. 

4 /8

தமன்னா, முதன் முறையாக தேவி படம் மூலம் பேய் படத்தில், பேய் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர்தான் ஹீரோயின். 

5 /8

தமன்னாவிற்கு பாலிவுட்டிலும் மார்கெட் உள்ளது. அங்கு பிரபல நடிகராக இருக்கும் விஜய் வர்மாவும் இவரும் காதலித்து வருகின்றனர். 

6 /8

தமன்னா, சமீபத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். சுந்தர்.சி இயக்கியிருந்த இந்த படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்திருந்த இவர், பேய் கதாப்பாத்திரத்தில் தோன்றி அனைவருக்கும் திகிலை ஏற்படுத்தினார். 

7 /8

தமன்னா, இந்த படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

8 /8

ஜெயிலர் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றுவதற்காக, ரூ.3 கோடி சம்பளமாக பெற்றிருந்த தமன்னா, அரண்மனை படத்தில் நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க, அவர் ரூ.4-5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.