பளிங்கு போல் மின்னும் பிரியா ஆனந்தின் வைரல் புகைப்படங்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு பிரியா ஆனந்த் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

1 /4

நடிகை பிரியா ஆனந்த் தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

2 /4

ஆரம்பத்தில் மாடலிங் செய்தவர் தமிழில் 2009ஆம் ஆண்டு வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

3 /4

2013-ம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர் மத்தியில் அதிகளவில் பிரபலம் அடைந்தார்.  இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் சமீபத்தில் ஆர்ஜே.பாலாஜியுடன் 'எல்கேஜி' படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்.  

4 /4

தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்லீவ்லெஸ் உடையில் பிரியா ஆனந்த் சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.  இவரை தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் பலரும் இதய எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.