Amala Paul: ஜிப்சி உடையில் கலக்கும் ’சிந்துசமவெளி’ நாயகி

சிந்து சமவெளி நாயகி அமலாபால், ஜிப்சி உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

கல்யாணமாகி செட்டிலான பிறகு கலர்கலரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அமலாபால்

1 /5

மலையாள தேசத்தில் இருந்து இறக்குமதியானவர் அமலாபால். முதல் படமான சிந்து சமவெளியிலேயே கவர்ச்சிக்கு அச்சாரம் போட்டார்

2 /5

அந்தப் படத்தில் நடித்த இவரை யார்? என திரையுலகம் தேடுவதற்குள் மைனா மூலம் பிரபலமானார். சிந்துசமவெளியில் நடித்த கதாப்பாத்திரத்துக்கும் மைனா கதாப்பாத்திரமும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. 

3 /5

அடுத்தடுத்து விகடகவி, தெய்வத் திருமகள், முப்பொழுதும் கற்பனைகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெய்வத் திருமகள் கதாப்பாத்திரமும் அமலா பாலை பக்கா ஹோம்லி கேர்ளாக காட்டியது.

4 /5

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மீண்டும் கவர்ச்சிக்கு திரும்பினார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து அதிரவைத்தார். கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் விளக்கமும் கொடுத்தார்.

5 /5

வேலையில்லா பட்டதாரியில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். இயக்குநர் விஜயை திருமணம் செய்து விவாகரத்து செய்து கொண்ட அவர், இப்போது மறுமணம் செய்து கொண்டுள்ளார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலர் கலரான புகைப்படங்களையும் பதிவிட்டு விருகிறார்.