சிம்பிளாக நடந்த அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்! ஜோடி பொருத்தம் சூப்பரு-வைரல் போட்டோஸ்!

Aditi Rao Hydari And Actor Siddharth Wedding Photos : பிரபல நடிகை அதிதி ராவிற்கும், சித்தார்த்திற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Aditi Rao Hydari And Actor Siddharth Wedding Photos : தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக விளங்கிய சித்தார்த்திற்கும் அதிதி ராவிற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த திருமணம், மிகவும் சிம்பிளாக நடந்து முடிந்திருப்பதாகவும், பாரம்பரிய முறைப்படி இவர்கள் கரம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு த்ரிஷ்டி சுத்தி போட வேண்டும் என்று கூறி வருகின்றனர். 

1 /8

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக விளங்குபவர், சித்தார்த். இவரும் நடிகை அதிதி ராவும் காதலித்து வந்தனர். 

2 /8

அதிதி ராவ்-சித்தார்த், 2021ஆம் ஆண்டு மஹா சமுத்திரம் என்ற படத்தில் ஒன்றாக நடித்தனர். 

3 /8

மஹா சமுத்திரம் படத்தில் ஒன்றாக நடித்த பின்பு இருவருக்கு காதல் பற்றிகொண்டது. இதையடுத்து, இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். 

4 /8

சித்தார்த்-அதிதி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. 

5 /8

அதிதி-சித்தார்த்திற்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அதிதியின் முன்னோர்கள் கட்டிய கோவிலில் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. சிம்பிளாக நடந்த இந்த திருமணத்தில், வெகு சிலரே கலந்து கொண்டிருக்கின்றனர். 

6 /8

இந்த திருமண புகைப்படங்களில், அதிதி சந்தன வண்ண புடவை கட்டியிருக்க, சித்தார்த் வேட்டி உடுத்தியிருக்கிறார். 

7 /8

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், இவர்கள் இருவரின் ஜோடி சூப்பராக இருப்பதாக கூறி வருகின்றனர். துல்கர் சல்மான் உள்பட பல்வேறு பிரபலங்கள் இவர்களுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

8 /8

இவர்களின் போட்டோக்கள் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.