‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் நடிகர் ஷ்யாம்!

Shaam With Vijay: கோலிவுட் நடிகர் ஷ்யாம், ‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

1 /7

லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 

2 /7

லியோ படத்திற்கு மக்கள் பலத்த வரவேற்பினை அளித்துள்ளனர். 

3 /7

நடிகர் ஷ்யாம், ‘குஷி’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து ஒரு சிறிய துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, 23 வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் ஒன்றினைந்து ‘வாரிசு’ படத்தில் நடித்தனர். 

4 /7

ஷ்யாம், வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார். விஜய், தனக்கு நல்ல நண்பர் என்றும் அவர் பல நேர்காணல்களில் கூறியதுண்டு. 

5 /7

ஷ்யாம், லியோ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். 

6 /7

லியோ படம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ஷ்யாம் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

7 /7

ஷ்யாம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.