கங்குவா படப்பிடிப்பில் விபத்து! சூர்யாவுக்கு என்ன ஆச்சு?

Accident in Kanguva shooting spot: கங்குவா படப்பிடிப்பு தளத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யாவிற்கும் அடிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1 /7

சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக ரோப் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

2 /7

கங்குவா படத்திற்காக சூர்யா சிக்ஸ் பேக்ஸ் வைப்பது, உடல் எடையை குறைப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். 

3 /7

படப்பிடிப்பி நடந்த விபத்தில் சூர்யா, லேசான காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யாவிற்கு அடிப்பட்டிருப்பதால் இன்று கங்குவா படத்தின் படப்பிடிப்பு நடைபெற வில்லை. 

4 /7

கங்குவா படத்தில் சூர்யாவிற்கு கையில் மிருக கீறல் உள்ளது. இதை படக்குழுவினர் சிஜி வேலைகள் மூலம் செய்து முடித்துள்ளனர். 

5 /7

கக்குவா படம், நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை உயர்த்தி வருகிறது. இதனை சிறுத்தை சிவா இயக்குகிறார். 

6 /7

இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகம் வரலாற்று கதைகளில் நடிக்காத சூர்யா, இந்த படத்தின் மூலம் முழுவதாக புது அவதாரம் எடுத்திருக்கிறார். 

7 /7

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் நேற்று நடந்த விபத்தில் சூர்யாவிற்கு பெரிதாக எதுவும் அடிபடவில்லை என்று தெரிந்த பின்புதான் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.