AC Choosing Tips & Tricks : ஏர் கண்டிஷனரை பொருத்தும்போது, அது எவ்வளவு டன் அளவில் தேவை என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கும். 1 டன்னா அல்லது 2 டன்னா என்பதை முடிவு செய்வது எப்படி? எளிமையாக தெரிந்துக் கொள்வோம்...
குளிரூட்டும் திறனை முடிவு செய்யும் ஏசியின் டன் என்பது ஒரு அறையின் அளவை வைத்து முடிவு செய்யப்படுகிறது. ஏசி எவ்வளவு காற்றை குளிர்விக்க முடியும் என்பதன் அடிப்படையில் ஏசியின் டன் என்பதை முடிவு செய்ய வேண்டும்
1 டன் ஏசி: சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறையை அதாவது சுமார் 100-150 சதுர அடி உள்ள அறையை குளிர்விக்க ஒரு டன் ஏசி போதுமானது.
2 டன் ஏசி: நடுத்தர முதல் பெரிய அளவிலான அறையை அதாவது தோராயமாக 150-250 சதுர அடி கொண்ட அறையை குளிர்விக்க 2 டன் ஏசி போதுமானது
அறையின் உண்மையான அளவு, அறை சூரிய ஒளி படும் வகையில் இருக்கிறதா, இருப்பிடம், சுவர்களின் கட்டுமானம், ஜன்னல்களின் எண்ணிக்கை என பல காரணிகளின் அடிப்படையில் ஒரு டன் அல்லது இரண்டு டன் ஏசி என்பதை முடிவு செய்ய வேண்டும்
ஏசி என்பது அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தால் நன்றாக செயல்படும் என்று நினைத்து விடாதீர்கள்.
அறைக்கு தேவைப்படுவதை விட பெரிய ஏசியை தேர்வு செய்தால், அது அதிக ஆற்றலைப் பயன்படுத்தும் இதனால் உங்கள் மின் கட்டணம் அதிகரிக்கும்
சரியான ஏசியைத் தேர்வுசெய்ய, உங்கள் அறையின் தேவைகளை மதிப்பிட்ட பின், தகுதியான HVAC தொழில்நுட்ப வல்லுநரை அணுகுவது நல்லது
இன்வெர்ட்டர் ஏசியை தேர்வு செய்வது நல்லது. இன்வெர்ட்டர் ஏசிகள் அதிக ஆற்றல் திறன் கொண்டவை மற்றும் இன்வெர்ட்டர் அல்லாத ஏசிகளை விட குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன.
நட்சத்திர மதிப்பீட்டில் கவனம் செலுத்துங்கள்: அதிக ஆற்றல் திறன் மதிப்பீடு (EER), அதிக திறன் கொண்ட ஏசியாக இருக்கும். அதேபோல, சில ஏசிகளில் டைமர்கள், ஃபேன் வேகக் கட்டுப்பாடுகள் மற்றும் தூக்க முறைகள் போன்ற கூடுதல் அம்சங்கள் உள்ளன, அவற்றையும் கவனத்தில் கொள்ளவும்