Pithru Darppan in Kerala: இந்து மதத்தில் முன்னோர்களுக்கான கடமையாக கருதப்படும் அமாவசை தர்ப்பணம், கேரள மாநிலத்திலும் அனுசரிக்கப்படுகிறது.
கொட்டும் மழையிலும் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி சிரத்தையுடன் மத சடங்குகளை செய்தனர்...
மேலும் படிக்க | முன்னோர்களுக்கு ஆடி அமாவசையன்று பித்ரு தர்ப்பணம் செய்யும் தமிழர்கள்
இந்து மதத்தின் பாரம்பரியத்தை தொன்று தொட்டு தொடரும் மலையாளிகள்
கேரளாவில் ஆடி அமாவாசையை கர்கடக வவுபலி என்று அழைக்கின்றனர்
கோவிட் நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்க்கிடக வைபவ நாளில் தர்ப்பணம் செய்ய பொதுஇடங்களில் அனுமதி கொடுக்கப்படவில்லை.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
நெய்யாட்டின்கரை தண்டலம் நாகராஜா கோவிலில் அனைத்து விதமான பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கர்கடக வவுபலி விழாக்கள் நடந்து வருகின்றன.
முன்னோர்களுக்கான நினைவு நாள் ஆடி அமாவாசை
பூமியில் ஒரு வருடம் என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள். தட்சிணாயனத்தில் பித்ருக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதல் அமாவாசை கர்கடகம். அதனால் தான் கார்க்கிடக வவுபலி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது