8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சமீபத்தில் நிதி செயலர் டிவி சோமநாதன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026ல் தான் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.
8th Pay Commission: எட்டாவது ஊதிய குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஃபாக்டர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 2.57 ஆக உள்ள பிட்மண்ட் ஃபேக்டர் 3.68 ஆக ஏற்றம் பெறும் என்று கூறப்படுகின்றது. அப்படி நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து 26 ரூபாயாக, அதாவது சுமார் 44% உயரக்கூடும். ஊதிய உயர்வின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் பணத் தேவையில் நிவாரணம் கிடைக்கும். நிதி சிக்கல்களை நிவர்த்தி செய்வது பணியாளர் திருப்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும்.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் புதிய ஊதிய கமிஷனான 8வது ஊதிய கமிஷனுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். எனினும் இது குறித்த எந்தவித தெளிவான அறிவிப்பும் இதுவரை அரசிடமிருந்து வரவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட காரணங்களால் இதற்கான நம்பிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளது.
சென்ற மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது ஊதிய குழுவின் உருவாக்கம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட அறிவிப்பு எதுவும் வராததால் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஏமாற்றத்தை எதிர்கொண்டனர்.
எனினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சமீபத்தில் நிதி செயலர் டிவி சோமநாதன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026ல் தான் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார். அவரது இந்த கூற்று 8வது ஊதியக்குழுவிற்கான நம்பிக்கையை இன்னும் அதிகரித்துள்ளது.
பொதுவாக ஊதிய குழுக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு 7வது ஊதிய குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தன. ஆகையால் இப்பொழுது எட்டாவது ஊதிய குழுவிற்கான அறிவிப்பு வந்தால் அதன் பரிந்துரைகள் 2026 ஆம் ஆண்டு வருவதற்கு ஏதுவாக இருக்கும்.
8வது ஊதிய குழு அமைக்கப்பட்டால் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 25% முதல் 35% வரை ஏற்றும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பயணப்படி (TA) போன்ற பல்வேறு கொடுப்பனவுகளிலும் ஏற்றம் இருக்கும்.
எட்டாவது குழுவின் மூலம் கிடைக்கும் நன்மைகளால் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். பணி ஓய்வுக்குப் பிறகான மேம்பட்ட நிதி பாதுகாப்பை அவர்கள் பெறலாம். ஓய்வூதியத்தில் 30% வரி அதிகரிப்பு இருக்கும்.
எட்டாவது ஊதிய குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 2.57 ஆக உள்ள பிட்மண்ட் ஃபேக்டர் 3.68 ஆக ஏற்றம் பெறும் என்று கூறப்படுகின்றது. அப்படி நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து 26 ரூபாயாக, அதாவது சுமார் 44% உயரக்கூடும்.
ஊதிய உயர்வின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் பணத் தேவையில் நிவாரணம் கிடைக்கும். நிதி சிக்கல்களை நிவர்த்தி செய்வது பணியாளர் திருப்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும். அதிக செலவழிப்பு வருமானம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையை அதிகரிக்க வழிவகுக்கும். அதிக சம்பளம் அரசாங்கத்திற்கு வரி வருவாயை அதிகரிக்கும். பணியாளர்களின் மேம்படுத்தப்பட்ட நிதிநிலை நல்வாழ்வு சமூக ஸ்திரத்தன்மைக்கு பங்களித்து, அரசு நலத்திட்டங்களின் சுமையை குறைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.