மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: எவ்வளவு? எப்போது? இதோ விவரம்

7th Pay Commssion: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

7th Pay Commssion: ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் டிஏ உயர்வு (DA Hike) தீர்மானிக்கப்படுகின்றது. ஜனவரி முதல் ஜூன் 2024 க்கு இடையில் பெறப்பட்ட எண்களின் அடிப்படையில், ஜூலை 2024 முதல் ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி வழங்கப்படும் என்பது முடிவு செய்யப்படும். இதுவரை ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எண்கள் வந்துள்ளன. ஜூன் மாத எண்கள் விரைவில் வரும். அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? நிபுணர்கள் கூறுவது என்ன? இங்கே காணலாம்.

1 /9

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்து வந்துவிட்டது. ஜூலை 2024 -இன்  அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய சமீபத்திய அப்டேட் வந்துள்ளது. ஜூன் 2024க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை இங்கே காணலாம்.

2 /9

ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. அப்படி டிஏ 3% அதிகரித்தால், இரண்டு ஆண்டுகளில் டிஏ 3 சதவீதம் அதிகரிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். கடந்த நான்கு முறைகளாக அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு வருகிறது. 

3 /9

ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகின்றது. தொழிலாளர் பணியகம் இதுவரை மே மாதம் வரையிலான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இப்போது ஜூன் எண்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த எண் ஜூலை 31 ஆம் தேதி வர இருந்தது. ஆனால் அது தாமதமாகிவிட்டது. இருப்பினும், தற்போதைய போக்குகளைப் பார்த்தால், அகவிலைப்படி 3 சதவீதம்தான் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இதுவரை வந்துள்ள ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் தற்போது அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டியுள்ளது.

4 /9

AICPI குறியீட்டு எண் என்ன? ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் டிஏ உயர்வு (DA Hike) தீர்மானிக்கப்படுகின்றது. ஜனவரி முதல் ஜூன் 2024 க்கு இடையில் பெறப்பட்ட எண்களின் அடிப்படையில், ஜூலை 2024 முதல் ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி வழங்கப்படும் என்பது முடிவு செய்யப்படும். இதுவரை ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எண்கள் வந்துள்ளன. 

5 /9

ஜனவரியில், ஏஐசிபிஐ குறியீட்டு எண் 138.9 புள்ளிகளாக இருந்தது, இதன் காரணமாக அகவிலைப்படி 50.84 சதவீதமாக அதிகரித்தது. அதன் பின்னர் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் பிப்ரவரியில் 139.2 புள்ளிகளாகவும், மார்ச் மாதத்தில் 138.9 புள்ளிகளாகவும், ஏப்ரலில் 139.4 புள்ளிகளாகவும், மே மாதத்தில் 139.9 புள்ளிகளாகவும் இருந்தன. இதன் அடிப்படையில், அகவிலைப்படி ஏப்ரல் மாதத்தில் 51.44 சதவீதம், 51.95 சதவீதம், 52.43 சதவீதம் மற்றும் மே மாதத்தில் 52.91 சதவீதம் என உயர்ந்துள்ளது.

6 /9

அகவிலைப்படியில் 3 சதவீத திருத்தமே சாத்தியம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். குறியீட்டின்படி, மே மாதம் வரை அகவிலைப்படி 52.91 சதவீதமாக உள்ளது. ஜூன் எண் இன்னும் வரவில்லை. ஜூன் மாதத்தில் குறியீடு 0.7 புள்ளிகள் அதிகரித்தாலும், அது 53.29 சதவீதத்தை எட்டும். 4 சதவிகிதம் அதிகரிப்பதற்கு, குறியீட்டெண் 143 புள்ளிகளை அடைய வேண்டும். இது சாத்தியமற்றதாக தோன்றுகிறது. குறியீட்டில் இவ்வளவு பெரிய உயர்வு இருக்க வாய்ப்பில்லை என கருதப்படுகின்றது. ஆகையால் இம்முறை ஊழியர்களுக்கு 3 சதவீத அதிகரிப்புதான் இருக்கும் என கூறப்படுகின்றது. 

7 /9

ஜனவரியில் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் (Dearness Relief) 4% அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50% ஆக உள்ளது. இப்போது ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக் அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொழிலாளர் பணியகம் அதன் தரவுகளை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும். அதன் பிறகு நிதி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், அது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படும். 

8 /9

அகவிலைப்படி (Dearness Allowance) 3% அல்லது 4% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும். பணவீக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். அகவிலைப்படி உயர்வு எப்போது வெளிவரப்பட்டாலும், அடுத்த மாதம் முதல், ஜூலை 2024 முதலான டிஏ அரியர் தொகையும் (DA Arrears) கிடைக்கும். 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.