மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் ஜம்முனு உயரப்போகுது அகவிலைப்படி

7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது? அகவைலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் என்ன?

 

7th Pay Commission: அகவிலைப்படி கணக்கீடு முன்பு இருந்தது போலவே இருக்கும் என்றும் அகவிலைப்படி கணக்கீடு (டிஏ உயர்வு கணக்கீடு) எப்போது போலவே தொடரும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நிலையான விதி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அடிப்படை ஆண்டு மாற்றப்பட்ட போது இது செய்யப்பட்டது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். 

1 /10

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஜூலை முதல் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு புதிய கணக்கீடு தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். எனினும், அப்படி நடக்காது என்பதற்கான அறிகுறிகள் இப்போது தென்படுகின்றன. இது ஒரு வகையில் ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2 /10

அகவிலைப்படி கணக்கீடு முன்பு இருந்தது போலவே இருக்கும் என்றும் அகவிலைப்படி கணக்கீடு (டிஏ உயர்வு கணக்கீடு) எப்போது போலவே தொடரும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நிலையான விதி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அடிப்படை ஆண்டு மாற்றப்பட்ட போது இது செய்யப்பட்டது. இப்போது அடிப்படை ஆண்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை, அத்தகைய பரிந்துரையும் இல்லை. ஆகையால் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் செய்யப்படும் என கூறப்படுகின்றது. 

3 /10

கடந்த இரண்டு மாதங்களாக ஏஐசிபிஐ குறியீடு (AICPI Index) தரவை தொழிலாளர் பணியகம் வெளியிடவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த டிஏ உயர்வின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிடுவது இன்னும் கடினமாக உள்ளது. பிப்ரவரி 2024 இல் அகவிலைப்படி தரவு புதுப்பிக்கப்படவில்லை. ஜனவரி 2024 இல் டிஏ (DA) 50 சதவீதத்தை எட்டியுள்ளது. 

4 /10

அகவிலைப்படி 50% -ஐ எட்டிய பின்னர் அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் (Basic Salary) சேர்க்கப்படும் என கூறப்பட்டது. எனினும், அப்படித்தான் நடக்க வேண்டும் என்ற விதி இல்லை. 2016 ஆம் ஆண்டில் அடிப்படை ஆண்டு மாற்றப்பட்டபோது மட்டுமே இது செய்யப்பட்டது.

5 /10

தற்போது அகவிலைப்படி பூஜ்ஜியம் (0) ஆக்கப்படாது என நிபுணர்கள் நம்புகின்றனர். அத்தகைய யோசனை எதுவும் தற்போது பரிசீலிக்கப்படவில்லை என்றும் அரசாங்கமும் தெளிவுபடுத்தியுள்ளது. தொழிலாளர் பணியகத்தில் தற்போது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான தரவு இல்லை. அகவிலைப்படி கணக்கிடுவதற்கான தரவு இப்போது மே 31 அன்று வெளியிடப்பட உள்ளது. இப்படி பல காரணங்களால் அகவிலைப்படி கணக்கீடு அப்படியே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

6 /10

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு (DA Hike) குறித்த அடுத்த சீராய்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. ஜனவரி வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின்படி, டிஏவின் எண்ணிக்கை 138.9 புள்ளிகளில் உள்ளது. அதாவது அகவிலைப்படியின் மதிப்பெண் 50.84 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆனால், தொழிலாளர் பணியகம் பிப்ரவரிக்கான தரவை இன்னும் வெளிடவில்லை. அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பின் அளவு இந்த தரவுகளை சார்ந்து இருக்கும். 

7 /10

அகவிலைப்படியில் (DA) அடுத்த அதிகரிப்பு 4 சதவீதமாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 54% ஆக அதிகரிக்கும். 

8 /10

தற்போதைய நிலவரப்படி பார்த்தால் ஜனவரி மாதத்திற்கான ஏஐசிபிஐ எண்கள் மட்டும்தான் வெளியாகியுள்ளன. அவற்றின் அடிப்படையில் அகவிலைப்படி சுமார் 1% அதிகரித்துள்ளது. தற்போது குறியீட்டு எண் 138.9 புள்ளிகளாக உள்ளது, அகவிலைப்படி மதிப்பெண் 50.84 சதவீதத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி முதல் மே வரையிலான தரவுகளும் வந்தவுடன் கண்டிப்பாக மொத்த அதிகரிப்பு 54% -ஐ எட்டும் என கூறப்படுகின்றது. 

9 /10

7வது ஊதியக் குழுவின் கீழ், 2024 ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI எண்கள் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படியைத் தீர்மானிக்கும். அகவிலைப்படி 50.84 சதவீதத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 மாத எண்கள் வரவில்லை. இம்முறையும் diE 4 சதவீதம் அதிகரிப்பது உறுதி என நிபுணர்கள் கருதுகின்றனர். அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படவில்லை என்றாலும், 4% அதிகரிப்பு ஊழியர்களின் ஊதியத்தில் பெரிய ஏற்றத்தை கொண்டு வரும். 

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.