7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் பம்பர் செய்திகள்

7th Pay Commission Update: 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அபரிமிதமான லாபத்தைக் கொண்டு வரப் போகிறது. மத்திய ஊழியர்களின் நன்மைக்காக மோடி அரசு மொத்தம் 3 முடிவுகளை எடுக்கக்கூடும். இவற்றில் மிகப்பெரிய நல்ல செய்தி ஊதியம் தொடர்பானதாக இருக்கும். இதற்கான அறிகுறிகள் வந்ததிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 

1 /4

ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 2024 தேர்தலுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசாங்கம் இந்த பெரிய பரிசை வழங்கக்கூடும் என தெரிகிறது. 

2 /4

ஒவ்வொரு ஆண்டையும் போலவே, 2023 ஆம் ஆண்டிலும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளது. ஜனவரி 2023-க்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும். இதுவரையிலான பணவீக்கப் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​அடுத்த ஆண்டும் ஜனவரியில் 4 சதவீத டிஏ உயர்வு இருக்கலாம் என்று தெரிகிறது.  

3 /4

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வரவேண்டியுள்ளது. இந்த 3 மாதங்களில், குறியீட்டெண் தொடர்ந்து வேகமாக வளர்ச்சியடைந்தால், அகவிலப்படி அதிகரிப்பு நிச்சயமாக 4% இருக்கும். குறியீட்டில் இடைவெளி இருந்தாலோ அல்லது அது அதிகரிக்காமல் இருந்தாலோ, அகவிலைப்படியில் 3 சதவீகித அதிகரிப்பு இருக்கக்கூடும். 

4 /4

2023 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அரசு அமல்படுத்தக்கூடும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளை நிரைவேற்ற பழைய ஓய்வூதியமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசும், தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடம் உள்ளது.