7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 18 மாத டி அரியர் தொகை குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று கிடைத்துள்ளது.
7th Pay Commission, DA Arrears: 2025 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. நிலுவைத் தொகையிலிருந்து பெறப்படும் பலன், ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்கள் தோராயமாக ரூ.11800 முதல் அதிகபட்சமாக ரூ.37554 வரை பெறுவார்கள். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.144,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.
7வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் நாட்களில் பல முக்கிய அறிவிப்புகள் வரவுள்ளன. அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகளில் சில கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கும் என தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 18 மாத டி அரியர் தொகை குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கோவிட் தொற்றுநோய் காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகை பற்றி சில நாட்களாக பேசப்பட்டு வருகின்றது. கொரோனா நோய் தொற்றின் போது முடக்கப்பட்ட 18 மாத டிஏ நிலுவைத் தொகையைப் பெற ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
கொரோனா தொற்று நோய் ஏற்பட்டபோது அனைத்து நாடுகளிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
அப்போது ஏற்பட்ட அசாதாரண சூழலால் உருவான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பலவித நடவடிக்கைகளை அரசு எடுத்தது. இதில் ஒரு பகுதியாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி முடக்கப்பட்டு அந்த தொகை அதிக தேவையில் இருந்த நலிந்த பிரிவினர்களுக்காக பயன்படுத்தப்பட்டது.
ஜூலை 2020 முதல் டிசம்பர் 2021 வரையிலான 18 மாதங்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) முடக்கப்பட்ட நிலையில், தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பு சற்று சரியானவுடன் முடக்கம் நீக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி அரியர் தொகையை அளிக்க வேண்டும் என மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையேற்று 2025 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
எனினும் மத்திய அரசிடம் அகவிலைப்படி நிலுவைத் தொகையை அளிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். இது குறித்த தெளிவை பெற பட்ஜெட் தாக்கல் வரை காத்திருக்க வேண்டும்.
நிலுவைத் தொகையிலிருந்து பெறப்படும் பலன், ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்கள் தோராயமாக ரூ.11800 முதல் அதிகபட்சமாக ரூ.37554 வரை பெறுவார்கள். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.144,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.
லெவல் 14 ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.1,82,200 முதல் அதிகபட்சமாக ரூ.2,24,100 வரை பெறுவார்கள். இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தோராயமானவை. பணியாளர்கள் பெறக்கூடும் உண்மையான தொகை மாறுபடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.