75th Independence Day: அரசு கட்டிடங்கள் மூவர்ணங்களில் ஜொலிக்கின்றன

புதுடெல்லி: இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15, 2021) கொண்டாடுகிறது. தில்லியில் உள்ள செங்கோட்டையில், தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். 

நாட்டில் உள்ள பல அரசு கட்டிடங்கள் மற்றும் முக்கிய வளாகங்கள் வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டுள்ளன. லால் சவுக்கில் உள்ள ஸ்ரீநகரின் கடிகார கோபுரம் உட்பட நாட்டின் பல பகுதிகள் தேசியக் கொடியின் வண்ணங்களில் ஒளிருமகின்றன.

1 /7

சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

2 /7

இந்திய விமானப்படையின் இரண்டு Mi 17 1V ஹெலிகாப்டர்கள் மூலம் செங்கோட்டையில் மலர்கள் தூவப்பட்டன (புகைப்படம்: Twirtter)

3 /7

பிரதமர் நரேந்திர மோடி 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் செங்கோட்டையில் இருந்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். (புகைப்படம்: BJP4India)

4 /7

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் (ITBP ) ஜவான்கள் லடாக் பாங்கோங் த்சோவின் கரையில் 2021 சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

5 /7

உத்தரபிரதேச சட்டமன்றம் மற்றும் லக்னோ ரயில் நிலையம் மூவர்ணத்தில் ஒளிருகின்றன. (புகைப்படம்: ANI)

6 /7

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணத்தில் ஒளிருகின்றது. (புகைப்படம்: ANI)

7 /7

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் கடிகார கோபுரம் மூவர்ணத்தில்  ஒளிருமகின்றது. (நன்றி: ANI)