வீட்டை சுற்றி மரங்கள் இருக்க வேண்டும் என்பார்கள். அதில் முக்கியமாக வளர்க்க வேண்டிய மரங்கள் யாவை. அதை எங்கே நட்டு வளர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
வாழையின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பட்டை, தண்டு, சாறு ஆகியவை அனைத்துமே மருத்துவ குணமுடையவை. அதன் இலையில் விருந்து உண்பது நிகழ்ச்சிகளின் சிறப்பு. பல்வேறு பயன்தரும் வாழை மரங்களை வீட்டின் தண்ணீர் செல்லும் இடங்களில் ஓரமாக வைக்க வேண்டும்.
வீட்டின் வேலி ஓரங்களில் வைக்க வேண்டிய மரம் பப்பாளி. 18 வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் பப்பாளி என்றால் அது மிகையாகாது. இந்த மரம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியது கட்டாயம்.
வீட்டின் பின்புறத்தில் வைக்க வேண்டிய மரம் முருங்கை. இந்த முருங்கை மரம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் ரத்தசோகை, சர்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பேச்சே இருக்காது. அதன் கீரையும், காயும் மருத்துவ ரீதியாக பல்வேறு நன்மைகளை தருகின்றன.
வீட்டில் நாம் பாத்திரங்கள் கழுவும் நீர் செல்லும் இடத்தில் நட வேண்டிய மரம் தென்னை. வீட்டின் உணவு தேவைக்கு மட்டும் இன்றி காய்ந்த தேங்காய்களை சேர்த்து வைத்து எண்ணை ஆட்டி பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நன்மை தரும்.
வீட்டின் முன்புறம் வைக்க வேண்டிய மரம் வேப்பமரம். பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக உள்ள வேப்பமரத்தின் கசப்பு தன்மை நோய் கிருமிகளை வீட்டிற்குள் அண்டவிடாது. அது மட்டுமின்றி மிகவும் சுத்தமான மற்றும் குளிர்ச்சியான காற்றை தரும்.
Next Gallery