ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பைகளை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் தோற்கடித்த அணிகளை பார்க்கலாம்.
எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பைகளை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே அணி சிஎஸ்கே தான்.
ஐபிஎல் 2010: முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் 2011: இரண்டாவது முறையாக விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் அப்போது தொடர்ச்சியாக 2 கோப்பைகளை வென்ற அணியாகவும் இருந்தது.
ஐபிஎல் 2018: ஐபிஎல் போட்டியில் சூதாட்ட புகாரில் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் 2018 ஆம் ஆண்டு திரும்பி வந்தது. அந்த ஆண்டே இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஐபிஎல் 2021: இந்த ஐபிஎல் போட்டியில் முதியோர்கள் அணி என தொடக்கத்தில் விமர்சிக்கப்பட்ட நிலையில், அந்த விமர்சனங்களை எல்லாம் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் இறுதிப் போட்டிக்கு வந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
ஐபிஎல் 2023: கடந்த ஆண்டு நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது தோனி தலைமையிலான சிஎஸ்கே. இதன் மூலம் ஐந்து முறை கேப்டனாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்தார்.