007 James Bondஆக நடிக்க பரிந்துரைக்கப்படும் இந்திய நடிகர்களில் அஜித்துக்கும் இடம்!

ஜேம்ஸ்பாண்ட் 007 திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றவை. பல்வேறு நடிகர்கள் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்திய நடிகர்களில் யாரெல்லாம் ஜேம்ஸ்பாண்டாக மாறி உளவு பார்க்கலாம். ஒரு கற்பனை. அடுத்த ஜேம்ஸ்பாண்டுக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கலாம் தெரியுமா?

ஜேம்ஸ்பாண்ட் 007 கதாபாத்திரம் உலக பிரசித்தி பெற்றது. 1952இல் உருவாக்கப்பட்ட கற்பனை உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட், பிரிட்டிஷின் இரகசிய சேவையின் உறுப்பினர். 007 இவரது ரகசிய குறிப்பெண் ஆகும். இக்கதாப்பாத்திரத்தை வைத்துப் பல புத்தகங்கள், திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள், காமிக்ஸ் கதைகள், காணொலி விளையாட்டுக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய நடிகர்களில் யாரெல்லாம் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கலாம். ஒரு கற்பனை...

 

1 /6

சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என பெரிய தலைகள் மட்டுமல்ல, நம்ம தல அஜித்தும் பட்டியலில் போட்டி போடுகிறார்... நீயா நானா என்ற போட்டி வைத்தால் யாருக்கு வோட்டு போடுவீங்க? 

2 /6

தசாவதாரத்தில் ஜார்ஜ் புஷ்ஷாகவே அவதாரம் எடுத்துவிட்டார், எனவே ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று கமலஹாசனே வாய்ப்பை மறுத்தால் தவிர, அவர் தான் பெஸ்ட் சாய்ஸ்...  

3 /6

ரஜினிகாந்த்துக்கு இல்லாத ஜேம்ஸ்பாண்ட் வேற யாருக்கு? எந்த வேடத்திலும் தூள் கிளப்பும் சூப்பர் ஸ்டார் ஜப்பானில் கொண்டாடப்படுவது உலகறிந்த ரகசியம் தானே!

4 /6

ஜேம்ஸ்பாண்ட் 007 கதாபாத்திரத்தில் பெண்ணா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஏன் கதாபாத்திரங்கள் கற்பனையில் உருவாவது தானே? ஆணுக்கு பெண் இளைத்தவரில்லை. தனக்கு ஜேம்ஸ்பாண்ட் 007ஆக நடிக்க ஆசை என்று ப்ரியங்கா சொல்லியிருக்கிறார். பாஸ், கொஞ்சம் ரிக்வெஸ்டை கன்சிடர் பண்ணலாமே?

5 /6

"King Khan" என்றழைக்கப்படும் ஷாருக்கானும் ஜேம்ஸ்பாண்ட் 007க்கு பரிந்துரைக்கப்படுகிறார்...

6 /6

பேரசர் அக்பராக ஜோதா அக்பரில் வாழ்ந்தவர் இரவு நேரத்தில் மாறுவேஷம் தரித்து உளவாளியாக இருந்ததை பார்த்தோமே? எனவே அவரும் ஜேம்ஸ் பாண்ட் 007க்கு பொருத்தமானவர் தான்.