ITR, வருமான வரி தாக்கல் சிக்கலின்றி செய்ய தேவையான 5 ஆவணங்கள்..!!!

ITR, வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்: வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் உங்களிடம் அனைத்து ஆவணங்களும்  தயாராக இருக்க வேண்டும். வருமானத்தைத் தாக்கல் சிக்கலின்றி செய்ய இது உங்களுக்கு உதவும், மேலும் தவறு ஏற்படவும் வாய்ப்பில்லை. இது தவிர, உங்களிடம் தேவையான ஆவணங்கள் இல்லையென்றால், உங்கள் வருமான வரி தாக்கலில்  பிரச்சனையும் ஏற்படலாம். எனவே, வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு முன், உங்களுக்கு எந்த ஆவணம் தேவை என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

1 /6

ITR, அதாவது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு முன், இந்த 5 ஆவணங்களையும் தயாராக வைத்துக் வைக்கவும்.

2 /6

நீங்கள் சம்பளம் வாங்குபவர் பிரிவை சேர்ந்தவர் என்றால், ITR தாக்கல் செய்வது மிக முக்கியம். படிவம் 16 என்பது ஒரு சான்றிதழ், இது ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் டி.டி.எஸ் (TDS)  பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. நிறுவனம் டி.டி.எஸ்ஸைக் கழித்து அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததையும் இது காட்டுகிறது. 

3 /6

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய, நீங்கள் ஆதார் தகவல்களை கொடுக்க வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139 ஏஏ-வின் கீழ், உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது  ஆதார் விவரங்கள் அவசியம். எனவே விபரங்களை தயாராக வைத்திருங்கள்.

4 /6

இந்த ஆண்டு, வரி செலுத்துவோர் தங்கள் வட்டி வருமானம் பற்றிய தகவல்களையும் வருவாய் படிவத்தில் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அவர்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து கிடைத்த வருமான விபரம், நிலையான வைப்புத்தொகை அல்லது வேறு எந்த மூலத்திலிருந்து பெற்ற வட்டி வருமான தொடர்பான விபரங்களை வழங்க வேண்டும். பிரிவு 80 டி.டி.ஏ இன் கீழ், 10 ஆயிரம் ரூபாய் வரை வட்டி வருமானத்தில் விலக்கு பெறலாம். 

5 /6

2019-20 நிதியாண்டில் 80 சி, 80 சிசி மற்றும் 80 சிடிசி (1) பிரிவுகளின் கீழ் செய்யப்பட்ட அனைத்து முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வரி விலக்கு பெறலாம். இதன் கீழ் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் விலக்கு வழங்க முடியும்.

6 /6

ஐ.டி.ஆரை தாக்கல் செய்யும் போது, ​​உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களையும் கொடுக்க வேண்டும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, ​​உங்கள் வங்கியின் பெயர், கணக்கு எண், கணக்கு வகை மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC CODE)  குறியீட்டை வழங்க வேண்டும்.