இந்தியாவின் இளம் செஸ் சாம்பியன் என்ற பெருமை டி. குகேஷுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இவரின் குடும்பம் எந்த நிலையிலிருந்து குகேஷுக்கு பக்கபலமாக இருந்தனர் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நவம்பர் 25 முதல் டிசம்பர் 13, 2024 வரை நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சிங்கப்பூர் சென்று அங்கு தன் முழுத்திறமையை காட்டி எட்டாத உயரத்தை எட்டி மிகப்பெரிய சாதனையைப் பெற்றுள்ளார்.
குகேஷ் வெற்றியில் பல்வேறு கஷ்டங்கள் நிறைந்துள்ளதால் இவரது தீராத கடின உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதியே இந்த வெற்றி வாகை என்று இவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.
குகேஷுக்கு சிறுவயதிலிருந்தே செஸ் மீது அதிகம் ஆர்வம் இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
குகேஷ் தன் கனவுக்காகச் சிறுவயதிலிருந்தே கடினமான பயிற்சி பெற்று வந்ததாகவும், பெற்றோர்களும் இதற்கு ஊக்குவித்து துணையாக இருந்ததாகவும் கூறுகிறார்.
வயது என்பது ஒரு எண் மட்டும்தான் என்று குகேஷ் தன் சாதனை மூலம் வெளிப்படுவதிருக்கிறார்.
குகேஷின் செஸ் கனவிற்காக இவரது தந்தை தன் வேலையை விட்டதாகக் கூறப்படுகிறது.
குகேஷ் பல இடங்களுக்கு விளையாட அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக இவரின் தந்தை வேலையை தியாகம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
குகேஷ் தாயார் மைக்ரோ பயாலஜிஸ்டாக இருந்ததாகவும், தன் மகனுக்காக குடும்பப் பொறுப்பைக் கையில் எடுத்ததாகவும் கூறுகின்றனர்.
குகேஷின் பெற்றோர்களின் நண்பர்கள் இவரது அடுத்தகட்ட செஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கப் பணம் கொடுத்து உதவி செய்ததாக கூறுகின்றனர்.