டாடா to பார்க்கிங்..2023ல் மக்கள் மனங்களை கவர்ந்த புதுமுக இயக்குநர்களின் படங்கள்!

2023 Hit Tamil Movies: இந்த வருடம் பல படங்கள் மக்களின் மனம் கவரும் வகையில் பல படங்கள் வெளிவந்துள்ளன. 

2023 Hit Tamil Movies: இந்த வருடம் பல படங்கள் மக்களின் மனம் கவரும் வகையில் பல படங்கள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக, புதுமுக இயக்குநர்கள் இயக்கிய சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவை என்னென்ன படங்கள்? அந்த படங்களை இயக்கியவர்கள் யார்? இங்கு பார்க்கலாம் வாங்க.

1 /7

இந்த ஆண்டு புதுமுக இயக்குநர்கள் பலர் தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்திருந்தனர். அவர்களின் படங்கள் பல வெளியாகி வெற்றி பெறவும் செய்தன. அந்த படங்களையும் அதை இயக்கிய புதுமுக இயக்குநர்களையும் இங்கு பார்ப்போம். 

2 /7

ஜூன் மாதம் வெளியாகி வெற்றி பெற்ற படம், போர் தொழில் திரைப்படம். அசோக் செல்வன், சரத் குமார், சரத்பாபு, நிகிலா விமல் உ ள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். 

3 /7

பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் டாடா. இந்த படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். இந்த படத்தை புது முக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். 

4 /7

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்த படம், யாத்திசை. இந்த படத்தை தரணி ராஜேந்திரன் இயக்கியிருந்தார். இதில், சக்தி மித்ரன், வைதேகி அமர்னாத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிதிருந்தனர்.

5 /7

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் குட் நைட். இந்த ஆண்டு வெளியாகி மக்களின் மனதில் அதிகமாக இடம் பெற்ற படங்களுள் குட் நைட் படமும் ஒன்று. இதில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது, விநாயக் சந்திரசேகரனின் முதல் படமாகும். 

6 /7

மனிதிரா மூர்த்தி இயக்கத்தில் வெளியான படம் அயோத்தி. சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கதையை இப்படம் கொண்டிருந்தது. இதில் சசிகுமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

7 /7

சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம் பார்க்கிங். இதில், ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.