பக்ரீத் திருநாள் தொழுகைகளின் சிறப்பு புகைப்படத் தொகுப்பு...

இன்று இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை நடத்தி வருகின்றனர்... பக்ரீத் சிறப்பு புகைப்படத் தொகுப்பு...

இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் அமைதியான முறையில் கொண்டாடப்படுகிரது. இறைவனின் கட்டளையை ஏற்று, உயிர்ப்பலி கொடுக்க துணிந்த தியாகத்தின் அடையாளமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் தியாகம் செய்வதற்கு தயங்கமாட்டார்கள் என்பதை உனர்த்தும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் இறைக் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகையை நடத்தாமல் வீடுகளிலேயே பெரும்பாலான மக்கள் தொழுகை நடத்துகின்றனர். 

ஊர்வலம் செலவத்ற்கும் அனுமதி இல்லை.  அதோடு, ஆடுகளை அறுத்து பலி கொடுக்கும் குர்பான் என்ற சடங்கை இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் வீடுகளிலேயே நடத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

1 /9

எம்மொழியில் சொன்னாலும் வாழ்த்து என்பது வாழ்த்தே.... ஆனால் இது அரேபிய மொழியில் ஈகைத் திருநாள் வாழ்த்தை செம்மொழியில் மொழிபெயர்த்த வாழ்த்து... அனைவருக்கும் பக்ரீத் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

2 /9

இஸ்லாமியர்களின் புனிதத்தளமான மெக்காவில் தொழுகை...

3 /9

ஈகைத் திருநாளை தொழுது கொண்டாடும் பெண்கள்....

4 /9

தாழ் பணிந்து தொழுதோர்க்கு பலனளிக்கும் ஈகைப் பெருநாள்...

5 /9

அரசர்களின் மசூதி இன்று அனைவருக்குமான மசூதி... அனைவரும் ஒன்று கூடி தொழும் மசூதி...

6 /9

தியாகத் திருநாளுக்கு ஒன்றுகூடும் காலம் இன்னும் வரவில்லை...அனைவரையும் பிரித்து வைத்து ஆட்டம் காட்டும் கொரோனாவை அழிக்க இறைவனிடம் இறைஞ்சும் இஸ்லாமியர்கள்...

7 /9

பாகிஸ்தானில் பக்ரீத் அமைதியாக அனுசரிக்கப்படுகிறது...

8 /9

தியாகத்திருநாளுக்கு அன்புடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் சிறுவர்கள்..

9 /9

மண்டியிட்டு தொழுவதே சாலச் சிறந்தது..