நலத்திட்டங்கள் அனைத்தையும் ஓட்டுக்காக செய்யவில்லை -கமல்!

எங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக நாங்கள் கிராமங்களுக்கு உதவவில்லை என கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு!  

Last Updated : May 1, 2018, 05:19 PM IST
நலத்திட்டங்கள் அனைத்தையும் ஓட்டுக்காக செய்யவில்லை -கமல்!  title=

எங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக நாங்கள் கிராமங்களுக்கு உதவவில்லை என கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு!  

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து துவங்கினார். மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் அவர் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் பெயரையும் அறிமுகம் செய்து வைத்தார். மக்கள் நீதி மய்யம் என்பது தான் கட்சியின் பெயர். 

இந்நிலையில், ஊழலுக்கு எதிரான 'மைய்யம் விசில்' செயலியை மக்கள் நீதி மைய்யம் தலைவர் நேற்று வெளியிட்டார். அதன் பிறகு அவர் தான் தத்தெடுத்த கிராமத்தை கமல்ஹாசன் இன்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களை சந்தித்து பேசினார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் கிராமத்தை நடிகர் கமல்ஹாசன் தத்தெடுத்துள்ளார். இந்நிலையில் இன்று அங்கு சென்ற அவர், ஊர் மக்களை சந்தித்து, அந்த கிராமத்திற்கான நலத்திட்டங்களை அறிவித்தார். 

இதை தொடர்ந்து கிராம மக்களிடம் கமல் பேசியதாவது.....! 

“உங்கள் கிராமத்தையும் சேர்த்து மொத்தம் எட்டு கிராமங்களைத் தத்தெடுக்க முடிவு செய்துள்ளோம். ஏன் வெறும் எட்டு கிராமங்கள் மட்டும் தத்தெடுக்கிறீர்கள் என நீங்கள் கேட்கலாம். மற்ற கிராமங்களையும் நம்முடன் சேர்க்க உங்களின் ஆதரவு எங்களுக்கு மிக முக்கியம். நான் இங்கு உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். இனி இது எங்களின் கிராமம். இந்தக் கிராமத்துக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்து தருகிறோம். 

இங்குள்ள ஏரிகள் புனரமைக்கப்படும். சிறிய அணைகள் மற்றும் மடைகள் அதிகத்தூரில் உருவாக்கப்படும். பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும். இங்குள்ள பள்ளியில் 3 அறைகள் குறைவாக உள்ளதாகக் கூறினார்கள், அவை கட்டித் தரப்படும். அதிகத்தூரில் 100 கழிப்பறைகள் கட்டித்தரப்படும் கழிப்பறைகள் கட்டியதும், அதை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? எப்படி பராமரிக்க வேண்டும்? என்பதை நானே நேரில் செய்து காட்டி சொல்லித் தருவேன். 

தற்போது என் கையில் இருக்கும் பேப்பரில் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. அதில் எது இந்தக் கிராமத்துக்கு மிக முக்கியமானது, உடனே தேவைப்படுவது என்பதை உங்களுடன் ஆலோசித்து விரைவில் அவை நிறைவேற்றப்படும். மற்ற கிராமங்களுக்கு எங்களைக் கொண்டு சேர்ப்பது உங்களின் கடமை” என முடித்தார்.அரசு செய்வதை மக்களாலும்  செய்ய முடியும் என காட்டப்போவதாக குறிப்பிட்டார். 

Trending News