அமுதாவும் அன்னலட்சுமியும்: நக்கலாக பேசிய வடிவேலு‌‌.. மரண பயத்தை காட்டிய அமுதா

Amudhavum Annalakshmiyum: நக்கலாக பேசிய வடிவேலு‌‌.. மரண பயத்தை காட்டிய அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 6, 2023, 11:59 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: நக்கலாக பேசிய வடிவேலு‌‌.. மரண பயத்தை காட்டிய அமுதா title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வடிவேல் அமுதா இருக்கும் இடத்திற்கு வந்து அவளிடம் நக்கலாக கோபத்துல இங்க வந்து உட்கார்ந்துட்டா உங்கப்புச்சி பட்ட அவமானம் சரியா போயிடுமா? என்னைய அடிச்சி அவமான படுத்துன அந்த ஆள எப்படி என் காலுல விழ வைச்சேன் பாத்தியா என நக்கலாக சொல்கிறான்.

மேலும் படிக்க | பிரபல கில்லாடி கொள்ளையனின் கதையா ஜப்பான் திரைப்படம்? முழு விவரம் இதோ..!

அதை கேட்ட அமுதா கோபத்தில் அங்கிருக்கும் சூலத்தை பிடுங்கி ஆவேசமாய் வடிவேல் கழுத்தில் வைத்து அழுத்த அவன் மிரண்டு போகிறான். மரியாதையா உன் உசிர காப்பாத்திக்கிட்டு ஓடிப்போயிரு என சொல்ல அங்கிருந்து ஓடுகிறான்.

அடுத்ததாக செந்தில் அன்னத்திடம் எல்லா பிரச்சனைக்கும் வடிவேல் தான் காரணம் அவன் அமுதாவை பழிவாங்க இப்படி பண்ணுறான் அவனை இந்த வீட்டை விட்டு அனுப்பு என சொல்ல, அன்னம் வடிவேலை வீட்டைவிட்டு அனுப்ப முடியாது என சொல்கிறாள்.

அதை தொடர்ந்து மாணிக்கம் செந்திலிடம் அமுதா அப்பாவை போயி பாக்கலாம் அவரை சமாதானப்படுத்தலாம் என கிளம்புகின்றனர். 

இந்த பக்கம் வடிவேலு சட்டை கிழிந்து வர, அன்னலட்சுமி செந்தில் அடித்து விட்டானா என கேக்க, அமுதாவிடம் தான் மன்னிப்பு கேக்க போனபோது அவள் தன்னை அடித்து தள்ளி விட்டு சூலத்தை எடுத்து கழுத்தில் வைத்து விட்டதாக சொல்ல அன்னம் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட CWC புகழ்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News