OMG.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல், டைம் மாறும் பழைய சீரியல்கள்

Zee Tamil: மக்களின் மனம் கவர்ந்த சீதா ராமன் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 2, 2024, 04:41 PM IST
  • ஜீ தமிழ் கொடுத்த ஷாக்.
  • முடிவுக்கு வரும் பிரபல சீரியல்.
  • மீண்டும் டைம் மாறும் பழைய சீரியல்கள்.
OMG.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல், டைம் மாறும் பழைய சீரியல்கள் title=

Zee Tamil: தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜீ தமிழ் சீரியல்களை விரும்பி பார்க்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு ஷாக் காத்திருக்கிறது. 

மதிய வேளையில் தொடங்கி இரவு வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தொடர்ந்து நல்ல ரேட்டிங்குகளை பெற்று வருகின்றன. இப்படியான நிலையில் மக்களின் மனம் கவர்ந்த சீதா ராமன் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெகு விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. சீதா ராமன் சீரியல் முடிவுக்கு வருவதால் மற்ற சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் நடைபெற இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | பவன் கல்யாணின் 'ஹரி ஹரா வீர மல்லு’ படத்தின் டீசர் வெளியானது!

ஆமாம், தற்போது 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாகவும் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல் இனி 7.30 மணி வரை என ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல். இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்ற செய்தி பரவத் தொடங்கியது முதல் இதன் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?

Trending News