நடிகை தமன்னாவின் வெறித்தனமான வொர்க் அவுட்: வைரல் வீடியோ

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 20, 2022, 12:04 PM IST
  • வொர்க் அவுட் வீடியோ
  • முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா
  • தற்போது சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார்
நடிகை தமன்னாவின் வெறித்தனமான வொர்க் அவுட்: வைரல் வீடியோ title=

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா, கடந்த 16 ஆண்டுகளில் அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

அதேபோல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். அதன்படி பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் மாஸ் நாயகியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்திழுத்தார் தமன்னா. நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் உலகளவில் பிரபலமானவர்.

மேலும் படிக்க | கொடிய நாகப்பாம்பை கூலாக காப்பாற்றிய நபர்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ 

பாகுபலியை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே தேர்வு செய்து வருகிறார் நடிகை தமன்னா. அதன்படி தேவி 1, தேவி 2 ஆகிய படங்களில் நடித்திருந்த தமன்னாவுக்கு, தமிழில் அதிக வாய்ப்பை பெறவில்லை. ஆனால் தற்போது அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு துறையில் சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தமன்னாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அதன்படி தற்போது நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வழக்கம் போல் வைரலாகி வருகிறது. மேலும் அவர் வொர்க் அவுட் செய்த இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பாசிட்டிவ் காமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News