விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் புகைப்படம்!

விஷ்ணு விஷால் தற்போது நடிக்கும் ஆர்யன் படத்தின் பூஜைக்கு அவரது மனைவி மற்றும் மகனுடன் கலந்துகொண்டதை உணர்வுபூர்வமாக சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Sep 4, 2022, 10:49 AM IST
  • ஆர்யன் பட பூஜையில் மனைவி மற்றும் மகனுடன் விஷ்ணு விஷால்.
  • செல்வராகவன், ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.
  • விஷ்ணு விஷால் மகன் புகைப்படம் வைரல்.
விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் புகைப்படம்! title=

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவருவரான விஷ்ணு விஷாலுக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர்.  இவர் தற்போது அறிமுக இயக்குனரான பிரவீன்.கே என்பவரது இயக்கத்தில் 'ஆர்யன்' என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார், இந்த படத்தில் செல்வராகவன், ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.  இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், ராட்சசன் படத்திற்கு பின்னர் ஒரு வலுவான போலீஸ் கதாபாத்திரத்தில் விஷ்ணு இந்த படத்தில் நடிக்கிறார்.  மேலும் இப்படத்தில் வாணி போஜன் தடயவியல் நிபுணராகவும், ஷ்ரதா நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.  இந்த படத்தின் தலைப்புக்கும், நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கிறது, அதாவது விஷ்ணு விஷாலின் மகனின் பெயரும், படத்தின் தலைப்பும் ஒரே பெயர். 

மேலும் படிக்க | கோலிவுட் வரலாற்றில் சிவகார்த்திகேயனின் 'டான்' படம் செய்த சாதனை!

ஆர்யன் படத்தின் தலைப்புக்கும், தனக்கும் உள்ள தொடர்பு குறித்து விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.  ஆர்யன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துக்கொண்டவர், அதில் எனது மகனின் பெயர் இப்போது என் படத்திற்கு பெயராக இருக்கிறது, இது எனக்கு மறக்கமுடியாத ஒரு தலைப்பாக மாறிவிட்டது என்று உணர்வுபூர்வமாக கூறியுள்ளார், மேலும் இதனுடன் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனரையும் குறிப்பிட்டுள்ளார்.  தற்போது ஆர்யன் படத்திற்கான பணிகள் பூஜையுடன் கோலாகலமாக ஆரம்பமாகிவிட்டது, இந்த படத்தின் பூஜையில் நடிகர் விஷ்ணு விஷால் அவரது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் மகன் ஆர்யன் ஆகியோருடன் கலந்து கொண்டிருக்கிறார்.

 

அதனைத்தொடர்ந்து நடிகர் விஷ்ணு தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்யன் படத்தின் பூஜை படங்கள் சிலவற்றை வெளியிட்டவர், அதில் இந்த பிணைப்பு பற்றி ஒரு சிலரால் தான் உணரமுடியும், ஆர்யன் படத்திற்கு ஆர்யனுடன் சேர்ந்து ஜுவாலா கட்டா கிளாப் செய்ததற்கு நன்றி, இது எனக்கு எப்போது சூப்பர் ஸ்பெஷல் படமாக அமையும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  பட நிகழ்ச்சியில் விஷ்ணு அவரது குடும்பத்தினருடன் கலந்துகொண்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

மேலும் படிக்க | கவுதம் மேனன் மீது கடும் அதிருப்தியில் சிம்பு ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News