ஒட்டகத்தினை மையமாக கொண்டு வெளியாகும் தமிழ் திரைப்படம்!

விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் பக்ரீத் திரைப்படத்தின் First Look வெளியாகியுள்ளது!

Last Updated : Aug 22, 2018, 12:36 PM IST
ஒட்டகத்தினை மையமாக கொண்டு வெளியாகும் தமிழ் திரைப்படம்! title=

விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் பக்ரீத் திரைப்படத்தின் First Look வெளியாகியுள்ளது!

தமிழ் திரையுலகில் முதல்முறையாக ஒட்டகத்தினை மையமாக கொண்டு "பக்ரீத்" திரைப்படம் உருவாகிறது. தற்போது “சுட்டுப்பிடிக்க உத்தரவு” திரைப்படத்தில் நடித்துவரும் விக்ராந்த் இப்படத்தின் நாயகனாக நடிக்கின்றார்.

இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் சுசீந்திரன், விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் “சுட்டுப்பிடிக்க உத்தரவு” படத்தின் டீஸர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விக்ராந்தின் அடுத்த படத்தினை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெகதீசன் சுபு என்பவர் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். M10 ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் MS முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு இசையினை டி இமான், எடிட்டிங் ரூபென் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் First Look போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Trending News