விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக அறியப்படுகிறார். சமீப காலங்களில் ரசிகர்களின் அபரிமிதமான அன்பை ஈட்டி வரும் நடிகர்களில் அவர் முன்னணியில் உள்ளார். தனது அன்பை மட்டுமே ரசிகர்களுக்கு அளித்து மக்கள் மனங்களில் ‘மக்கள் செல்வனாய்’ உலா வரும் நாயகன் விஜய் சேதுபதி.
ரசிகர்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பிற்கு அளவில்லை என்றே கூறலாம். அனைவருடனும் நட்புடன் அவர் பழகும் விதம் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இப்போது வெளிவந்துள்ள ஒரு சமீபத்திய வீடியோவில், விஜய் சேதுபதியை (Vijay Sethupathi) ஏன் 'மக்கள் செல்வன்' என்று ரசிகர்கள் அன்பாக அழைக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
This alone is enough for this moment and to this day
Love u @VijaySethuOffl anna
Thanks to all#VijaySethupathi#fridaymorning pic.twitter.com/EWj8KtYlZD
(@Bulletvikki) November 27, 2020
விஜய் சேதுபதி, தனது ஒரு ரசிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வீடியோ மூலம் அனுப்பினார். இதன் மூலம் அந்த ரசிகரின் பிறந்தநாளை மிகவும் மறக்கமுடியாத ஒரு நாளாக மாற்றினார்.
விஜய் சேதுபதியின் இந்த சைகை அவர் தனது ரசிகர்கள் (Fans) மீது எத்தனை அன்பு கொண்டுள்ளார் என்பதை நிரூபிக்கிறது. அவர்களது எதிர்பார்ப்புகளை அறிந்து அவர் அவ்வப்போது இது போன்ற க்யூட்டான பல செயல்களை செய்கிறார்.
ALSO READ: இசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு
விஜய் சேதுபதி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்க இது ஒரு மிகப் பெரிய காரணம். தனக்கு ஆதரவாக நிற்கும் நபரை அவர் ஒருபோதும் மறக்க மாட்டார்.
‘கருப்பன்’ படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் தவசியின் மருத்துவ சிகிச்சைக்காக விஜய் சேதுபதி சமீபத்தில் 1 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். ஆனால் நடிகர் தவசி (Thavasi) புற்றுநோய்க்கான சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் என்பது பரிதாபத்துக்குரிய விஷயமாகும்.
விஜய் சேதுபதி தொடர்ச்சியாக தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் 'லாபம்' படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசனை (Shruthi Haasan) சந்திக்க ரசிகர்கள் தினமும் ஏராளமானோர் திரண்டு வருகின்றனர்.
ALSO READ: இந்து மதத்தை விமர்சித்ததா மூக்குத்தி அம்மன்? படத்தில் காட்டப்பட்ட போலி சாமியர் யார்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR