‘மாவீரன்’ படத்தில் குரல் கொடுக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Vijay Sethupathi Salary in Maaveeran: மாவீரன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 

Written by - Yuvashree | Last Updated : Jul 17, 2023, 07:47 PM IST
  • நடிகர் விஜய் சேதுபதி மாவீரன் படத்தில் குரல் கொடுத்திருந்தார்.
  • இதற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
  • வாய் பிளந்த ரசிகர்கள்.
‘மாவீரன்’ படத்தில் குரல் கொடுக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம், ஜெயிலர். இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி முகமில்லா ஒரு கதாப்பாத்திரமாக வந்து பலரையும அசத்தினார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பள விவரம் வெளிவந்துள்ளது. 

விஜய் சேதுபதி..

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘புதுப்பேட்டை’ படம் மூலம் அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தனது திரை வாழ்க்கையின் ஆரம்ப காலக்கட்டங்களில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்துக்கொண்டிருந்த இவர், தென் மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து வெற்றிப்படங்காக கொடுத்து வந்தார். மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த இவர், தற்போது பாலிவுட் ஹீரோக்களுக்கும் வில்லனாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ‘மாவீரன்’ படத்தில் குரல் கொடுத்திருந்தார். 

‘மாவீரன்’ படத்தில் விஜய் சேதுபதி..

சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்த மாவீரன் படத்தில் முகமே காட்டாத இன்னோரு கதாப்பாத்தரமும் ஹீரோவுக்கு நிகரான பாத்திரமாக பார்க்கப்பட்டது. இதற்கு குரல் கொடுத்திருந்தது, ரசிகர்களால் ‘மக்கள் செல்வன்’ என அழைக்கப்படும் விஜய் சேதுபதிதான். கால்வாசி படத்திற்கு மேல் வந்த இந்த கதாப்பாத்திரத்தின் குரல் படம் முழுவதும் ஹீரோவுடன் பயணித்தது. இந்த கதாப்பாத்திற்கு குரல் கொடுப்பதற்காக விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என மக்கள் ஆர்வமுடன் தேடி வந்தனர். அவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | விக்ரமன் மீது அடுக்கடுக்கான புகார்கள்! யார் இந்த கிருபா முனுசாமி?

குரல் கொடுக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்..

மாவீரன் படத்தில் குரல் மட்டுமே கொடுத்த விஜய் சேதுபதி, அதற்காக 1 பைசா கூட சம்பளமாக வாங்கவில்லையாம். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. காரணம், விஜய் சேதுபதி ‘ஜவான்’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இதில் நடிப்பதற்காக அவர் 21-23 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என பேசப்படுகிறது. இந்த நிலையில், மாவீரன் படத்திற்கு இவர் சம்பளமே வாங்காமல் வேலை செய்து கொடுத்திருப்பது பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. மேலும், இவர் மாவீரன் படத்தில் இயக்குநர் மடோன் சபாஸ்டியன் மற்றும் ஹீரோ சிவகார்த்திகேயன் ஆகியோரின் மீது வைத்துள்ள அன்பு மற்றும் நட்பு காரணமாக சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது. மாவீரன் படத்தின் தயாரிப்பு பணிகள் நடைப்பெற்று கொண்டிருந்த போது அப்படத்தின் தயாரிப்பாளர் பொருளாதார நெருக்கடியில சிக்கியதாக கூறப்படுகிறது. இதுவும் விஜய் சேதுபதி பணம் வாங்காததற்கு காரணமாக இருக்கலாம் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

‘ஜவான்’ படத்தின் வில்லன்..

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தில் நயன்தாரா, பிரியாமணி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இதில் பயங்கர வில்லனாக நடித்துள்ளாராம். பாலிவுட் நாயகி தீபிகா படுகோன் இதில் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருகிறார். நடிகர் விஜய்யும் இதில் கொளரவ தோற்றத்தில் வரலாம் என கூறப்படுகிறது. 

பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் மக்கள் செல்வன்..

நடிகர் விஜய் சேதுபதி லோக்கல் தமிழ் பேசி, கோலிவுட்டின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக மாறிவிட்டாலும் பாலிவுட்டிலும் ஒரு கண் வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘ஃபர்சி’ தாெடர் மூலம் பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமானார். இதையடுத்து ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீ-மேக்கான ‘மும்பைகார்’ என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்தார். அடுத்து, இவர் கத்ரீனா கைஃப்புடன் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற பேய் படம் டிசம்பரில் வெளிவர இருக்கிறது. இதனால், இவர் இந்தியில் ஆதிக்கம் செலுத்தும் ஹீரோவாக உருவாகிவிடுவார் என நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘நீ பற்ற வைத்த நெருப்போன்று..’ விக்ரமனை தாக்கினாரா ‘பிக்பாஸ்’ வெற்றியாளர் அசீம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News