இன்று வெளியாகிறது "டிக் டிக் டிக்" திரைப்படத்தின் இசை!

ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "டிக் டிக் டிக்" படத்தின் இசை இன்று வெளியாகிறது!

Last Updated : Jan 4, 2018, 09:58 AM IST
இன்று வெளியாகிறது "டிக் டிக் டிக்" திரைப்படத்தின் இசை! title=

ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "டிக் டிக் டிக்" படத்தின் இசை இன்று வெளியாகிறது!

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் "டிக் டிக் டிக்". இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும், இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி (குடியரசு தினம்) முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்லவரவெற்பை பெற்றது. 

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் "டிக் டிக் டிக்" படத்தின் இசை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 

மேலும் இப்படம் இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கும் 100-வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

Trending News