துணிவு ட்ரெய்லர் - ஒரு மணி நேரத்தில் செய்த சாதனை

துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 31, 2022, 08:53 PM IST
  • துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது
  • ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்
  • ஒரு மணி நேரத்தில் சாதனை படைத்துள்ளது
 துணிவு ட்ரெய்லர் - ஒரு மணி நேரத்தில் செய்த சாதனை title=

துணிவு மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்லப்போகிறார் என்பதை காண திரையுலகம் ஆவலாக இருக்கிறது. ரசிகர்களும் தங்களுக்குள்ளான கருத்து மோதல்களை சமூக வலைதளங்களில் தொடங்கியிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜுவின் கருத்து சர்ச்சையாக அதற்கும் அஜித் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்தச் சூழலில் இரண்டு படங்களிலிருந்தும் பாடல்களும், அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருந்தன. சில நாள்களுக்கு முன்பு துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதற்கு அடுத்ததாக வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியனது.

வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த 24ஆம் தேதி நடந்தது. இதற்கிடையே துணிவு படத்தில் இடம்பெற்றிருக்கும் கேங்ஸ்டா என்ற பாடலும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து துணிவு படத்தில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்திலும், சமுத்திரக்கனி தயாளன் என்ற கதாபாத்திரத்திலும், வீரா ராதா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். மேலும் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. அஜித்தின் கதாபாத்திர பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. ட்ரெய்லரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிலும் அஜித்தின் கதாபாத்திர பெயர் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் துணிவு ட்ரெய்லர் வெளியாகி ஒரு மணி நேரத்துக்குள் இதுவரை 3.2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | வெளியானது துணிவு ட்ரெய்லர் - ரசிகர்கள் கொண்டாட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News