வில்லனை மணக்க போகும் ஆடை வடிவமைப்பாளர்! டெலீட் செய்தாலும் வைரலாகும் போட்டோஸ்!

தமிழில் விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜம்வால். இவர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு,ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

Written by - RK Spark | Last Updated : Sep 7, 2021, 06:33 PM IST
வில்லனை மணக்க போகும் ஆடை வடிவமைப்பாளர்! டெலீட் செய்தாலும் வைரலாகும் போட்டோஸ்! title=

தமிழில் விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜம்வால். இவர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு,ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்தியத் திரைப்பட நடிகரான இவர் வடிவழகனாகவும், தற்காப்புக் கலைஞராகவும் உள்ளார்.ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர். களரிப்பயிற்று என்ற கலையையும் கற்றவர்.  தற்போது சனக், குதா ஹஃபீஸ் சாப்டர் 2, ஐபி71 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வித்யூத் ஜம்வால் தனது காதலியுடன் இருக்கும் போட்டோக்கள் சில வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வித்யூத் ஜம்வாலுக்கும், ஆடை வடிவமைப்பாளர் நந்திதாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காதலியுடன் வித்யூத் ஜம்வால் தாஜ்மகாலுக்கு சென்றுள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகிறது.  அந்த புகைப்படத்தில் நந்திதா கை விரலில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டதாக நடிகை நேஹா துபியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தாஜ்மஹாலில் வித்யூத் மற்றும் நந்திதா இருக்கும் போட்டோக்களை பகிர்ந்திருந்தார். அதன்பின்னர் சிறிது நேரத்திலே அந்த பதிவை நீக்கிவிட்டார் நேகா. இருப்பினும் அவர் டெலிட் செய்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

vidyut

நந்திதா ஏற்கனவே டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்து விட்டார்.அதேபோல் வித்யூத் ஜம்வாலும் இந்தி நடிகை மோனா சிங்குடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் என்பது குறிபிடத்தக்கது .

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News