தளபதி 65 படத்தின் மாஸ் அறிவிப்பு- வீடியோ!

தளபதி விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2020, 06:10 PM IST
தளபதி 65 படத்தின் மாஸ் அறிவிப்பு- வீடியோ! title=

தளபதி விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சற்று முன்னர் தளபதி 65 (Thalapathy 65) படம் குறித்து படக்குழு டுவிட்டர் பக்கத்தில் மாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ’தளபதி 65’ (Vijay) திரைப்படத்தை நெல்சன் (Nelson) இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அனிருத் (Anirudh Ravichander) இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Master: தளபதி விஜய்யின் "மாஸ்டர்" திரைப்படம் வெளியீடு தேதி குறித்து படக்குழு விளக்கம்

இந்த அறிவிப்பு இரண்டு நிமிட வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கலாநிதி மாறன், தளபதி விஜய் மற்றும் நெல்சன் ஆகியோர்கள் தோன்றும் காட்சிகளும் உள்ளன. இந்த அறிவிப்பு வெளியான காரணமாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News