தமிழ் சினிமாவில் இத்தனை ‘வாரிசு’ நடிகர்களா..! முடிவே இல்லாமல் நீளும் லிஸ்ட்..!

Father's Day 2023: கோலிவுட்டில் பிரபல நடிகர்களாக இருந்தவர்களின் வாரிசுகளும் திரையுலகில் இப்போது கலக்கிக் கொண்டு இருக்கின்றனர். அந்த நடிகர்களையும் அவர்களது வாரிசுகளையும் பார்க்கலாமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 18, 2023, 10:41 AM IST
  • இன்று தந்தையர் தினம்.
  • தமிழ் சினிமாவின் நடிகர்களும் அவர்களது அப்பாக்களும்.
  • லிஸ்டில் பல முன்னணி நடிகர்கள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் இத்தனை ‘வாரிசு’ நடிகர்களா..! முடிவே இல்லாமல் நீளும் லிஸ்ட்..! title=

தமிழ் சினிமா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் பல நடிகர்கள் தங்களது அப்பாக்கள் மூலம் திரையுலகிற்குள் வந்து சாதனை படைத்துள்ளனர். தமிழ் சினிமாவும் அதற்கு சளைத்தது அல்ல. அந்த நடிகர்கள் யார் யார் தெரியுமா? 

எஸ்.ஏ.சந்திரசேகர்-விஜய்:

1980-2000 காலக்கட்டத்தில் வெற்றிபெற்ற கமர்ஷியல் இய்குகநர்களுள் ஒருவராக வலம் வந்தவர், எஸ்.ஏ. சந்திரசேகர். தனது மகன் விஜய்யை 1992ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘நாளைத்தீர்ப்பு’ படம் மூலம் அறிமுகம் செய்தார். பிறகு ஒன்ஸ்மோர், நெஞ்சினிலே, சுக்ரன், பிரியமுடன் என பல படங்களில் விஜய்யையே ஹீரோவாக நடிக்க வைத்தார். இன்று, நடிகர் விஜய் யாரும் பிடிக்க முடியாத உயரத்தை எட்டி விட்டார். 

மேலும் படிக்க | தமன்னாவால் அப்செட்டில் ரஜினி? என்ன இப்படி பண்ணிட்டாரே

சூர்யா, கார்த்தி-சிவகுமார்:

சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் பல பக்தி படங்களில் ஹீரோவாக நடித்து நமது அம்மா-அப்பாக்களுக்கு பிடித்த ஹீரோாக இருந்தவர் சிவகுமார். இவரது மகன்கள் சூர்யா-கார்த்தி இருவருமே இப்போது தமிழ்சினிமாவின் பிரபல ஹீரோக்கள் ஆகிவிட்டனர். சூர்யா தனது 42ஆவது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். கார்த்தி, திறமையான நடிகர்-நல்ல கலைஞர் என்பது போன்ற பெயர்களை எடுத்து தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கையில் ஏறுமுகத்தையே கண்டுவருகிறார். இவர்கள் இருவரும் தனது தந்தையை போலவே சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து விட்டனர். 

சிம்பு-டி.ராஜேந்தர்:

80களில் நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்ளின் மனங்களில் இடம் பிடித்தவர் டி.ராஜேந்தர். இவர் இயக்கிய பல படங்கள் அனைத்தும் தனித்துவமாகவும் மக்கள் இதுவரை கேட்டிராத கதையாகவும் இருந்தன. சிம்பு, சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் பல படங்களில் முகம் காட்டினார். “என் பேரு சிம்பு, என்கிட்ட செய்யாதடா வம்பு கைல பாத்தியாடா கம்பு..அடிவாங்க இருக்காடா தெம்பு..” என்று இவர் அறியாத வயதில் தெரியாமல் பேசிய டைலாக், இப்போது மீம் மெட்டீரியலாக வலம் வருகிறது. தன் அப்பாவின் ஸ்டைலை சினிமாவிற்கு வந்த புதிதில் பின்பற்றி வந்த இவர், தற்போது அதை சற்று மாற்றிக்கொண்டு விதவிதமாக வெவ்வேறு பாணியில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தனுஷ்-கஸ்தூரி ராஜா:

கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று உலக நடிகராக மாறியுள்ளவர், தனுஷ். ஆரம்பத்தில் இவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழ் சினிமா, இப்பாேது இவரை தலையில் தூக்கிக்கொண்டு கொண்டாடி வருகிறது. தனது தந்தை இயக்கிய “துள்ளுவதோ இளமை” படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். பின்னர் நடந்தவையெல்லாம் வரலாறுதான். கஸ்தூரி ராஜாவின் இன்னொரு மகனான செல்வராகவனும் தற்போது தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருகிறார். 

கார்த்திக்-கெளதம் கார்த்திக்:

90’ஸ் குழந்தைகளுக்கு காமெடி-காதல் ஹீரோவாக நினைவிருப்பவர் கார்த்திக். இவர் தமிழ் பேசும் ஸ்டைல், அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு நடிக்கும் விதம் என எல்லாமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இவரது மகன் கெளதம் கார்த்திக், 2013ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோக்களுள் ஒருவராக இருக்கிறார். 

முரளி-அதர்வா:

மறைந்த நடிகர் ‘இதயம்’ முரளியின் செல்ல மகன், அதர்வா. தமிழ் சினிமாவின் ரசிகைகளின் ‘கனவுகண்ணனாகவும், சாரமிங் ஹீரோவாகவும் வலம் வருபவர் அதர்வா.வளர்ந்து வரும் ஹீரோவான இவர் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் சமந்தா, வேதிகா, ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தார். 

இன்னும் பலர்…

மேற்கூறியவற்றை விட இன்னும் பலர் தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்களாகவும், வாரிசு சினிமா கலைஞர்களாகவும் வலம் வருகின்றனர். அவர்களின் லிஸ்ட்..

-இயக்குனர் ஐஸ்வர்யா-ரஜினிகாந்த்

-சிபிராஜ்-சத்யராஜ்

-பிரசாந்த்-தியாகராஜன்

-சாந்தனு-பாக்யராஜ்

-அருண் விஜய்-விஜயகுமார்

-ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன்-கமல்ஹாசன்

-துருவ் விக்ரம்-விக்ரம்

-விக்ரம் பிரபு-பிரபு

-இளையராஜாவின் சகோதரர்கள், மகன்கள், சகோதரர்களின் மகன்கள் என பலர் சினிமாவின் முக்கிய கலைஞர்களாக வலம் வருகின்றனர். 

மேலும் படிக்க | OTTல் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்; Netflix, Amazon, Hotstar, ZEE5ல் பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News