தமிழ் திரையுலகின் பிரபலமான குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் காலமானார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 400 அதிகமான படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் நேற்று இரவு 11 மணியளவில் தூக்கத்திலேயே காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவால் நேற்று இரவு காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ், தில்லியில் இருந்த கால கட்டத்தில், தக்ஷின பாரத நாடக சபா எனப்படும் நாடகக் குழுவில் பல நாடகங்களில் நடித்தவர் .
1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமான டெல்லி கணேஷ். குணச்சித்திர வேடங்களில் மட்டும் இன்றி காமெடி கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் டெல்லி கணேஷ், கமல்ஹாசனும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், முதல் தற்போது உள்ள இளம் நடிகர்கள் வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் டெல்லி கணேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குணச்சித்திர வேடம் மட்டுமல்லாது நகைச்சுவை காதாபாத்திரங்களில் ம்க சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாகவும் நடித்துள்ளார். சிந்து பைரவி, நாயகன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி போன்றவை அவரது சிறந்த படங்களில் சில.இறுதியாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளி வந்த இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார் டெல்லி கணேஷ்.
மேலும் படிக்க | ரூ. 200 கோடியை நெருங்கிய அமரன்.. 9 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா !!
திரைப்படங்கள் மட்டுமல்லது, பல்வேறு டிவி தொடர்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.. டெல்லி கணேஷ் உடல், சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரத் உடலுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், அவரது ரசிகர்களும் , அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பசி என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு கிடைத்து.. மேலும் கடந்த 1994ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து சிறப்பித்தது.
மேலும் படிக்க | Dhanush : அடேங்கப்பா! வெறித்தனமாக 12 படங்களில் கமிட் ஆன தனுஷ்!! லிஸ்ட் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ