தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று புருவ புயல் ''பிரியா வாரியரின்' மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் நாளை விசாரணை மேற்கொள்ள உள்ளது.
ஒரு அடர் லவ் படத்தில் வரும் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளால் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியா வாரியர் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இதனை ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம் இன்று அவர் மனுவுக்கு நாளை விசாரணை மேற்கொள்ள உள்ளது.
கடந்த 12-ஆம் தேதி புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படத்தின் டீசர் காட்சிகள் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.
அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மாணிக்ய மலரே பூவி. இந்த பாடல் யூடியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில்,மனதை கொள்ளை கொண்ட மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக ஹைதராபாத்தில் இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்தள்ளனர்.
ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். இதுபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
Supreme Court to hear the petition filed by Actor #PriyaPrakashVarrier seeking quashing of FIR registered against her in connection with #ManikyaMalarayaPoovi song of her upcoming film #OruAdaarLove. She had filed the petition yesterday. (file pic) pic.twitter.com/UTD2pz3vNK
— ANI (@ANI) February 20, 2018
இதில் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தும்படியாக இல்லை என்பதால் அந்த பாடல் காட்சிகளை நீக்க முடியாது என்று படத்தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதை தொடர்ந்து பிரியா வாரியரின் மனுவுக்கு உச்சநீதிமன்றம் நாளை விசாரணை மேற்கொள்ள உள்ளது.