அடி தூள்..லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த்..இந்த தேதியில் சூட்டிங்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்து சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 7, 2023, 12:08 PM IST
  • அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
  • இதற்கான போட்டோஷூட் ரகசியமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ரஜினியுடன் இணைந்து நடிகை தமன்னாவும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார்.
அடி தூள்..லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த்..இந்த தேதியில் சூட்டிங் title=

ரஜினியின் 'தலைவர் 171' : அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இது குறித்த ஒரு வீடியோவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதனிடையே சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட இந்த வீடியோவில் கன்னடம் மற்றும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் இந்தியின் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர். 

ஜெயிலர் படத்தில் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ரஜினியுடன் இணைந்து நடிகை தமன்னாவும் இப்படத்தில் நடிக்கிறார். இது, அவருக்கு ரஜினியுடனான முதல் படமாகும். இவர்களையடுத்து நடிகர்கள் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையால சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | Jawan Update: பொறுத்தது போதும்..வந்தாச்சு ஜவான் பட அப்டேட்..ரிலீஸ் எப்போது தெரியுமா?

இதற்கிடையே அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுவருவதாகவும் விரைவில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இதன் பிறகு ’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் - ஞானவேல் இணையும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 171வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான போட்டோஷூட் ரகசியமாக சென்னையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குநர். இதுவரை அவர் எடுத்த நான்கு படங்களும் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக கைதி, மாஸ்டர், விக்ரம் படம் நூறு கோடி ரூபாயை அசலாட்டாக வசூலித்தன. இதனால் அவரது பயணம் இப்போது ஏறுமுகத்தில் இருக்கிறது. இதற்கிடையில் தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் திரிஷா, ப்ரியா ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், ஜோஜூ ஜார்ஜ், மேத்யூ தாமஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். காஷ்மீர், சென்னை போன்ற இடங்களில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது, விறுவிறுப்பாக நடந்துவரும் படத்தின் பணிகள் விரைவில் முடிவடைந்து படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இயக்குநராக கலக்கிவரும் லோகேஷ் கனகராஜ் நடிகராகவும் களமிறங்கவிருக்கிறார். சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் அனிருத்து, லோகேஷும் நடிக்கவிருக்கிறார்கள். இதில் லோகேஷ் கனகராஜுக்கு முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சமந்தா மிகவும்... கஸ்டடி பட பிரமோஷனில் விவாகரத்து பற்றி நாக சைதன்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News