ரஜினியுடன் இணையும் சூர்யா.. ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட் ட்ரீட்

Superstar Rajinikanth and Suriya to team up: ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படமான Thalaivar 170 படத்தை ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 26, 2023, 10:23 AM IST
  • 'தலைவர் 170' படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
  • தலைவர் 170 திரைப்படத்தில் இணையும் முன்னணி நடிகர்.
  • தற்போது ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
ரஜினியுடன் இணையும் சூர்யா.. ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட் ட்ரீட் title=

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று பிரபலமாக அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடிக்கடி படம் பற்றிய அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கப்போகும் 'தலைவர் 170' படத்தில் வலுவான கூட்டணி இணைந்துள்ளது, இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 'ஜெய் பீம்' படத்தின் மூலம் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த த.செ.ஞானவேல் தான் 'தலைவர் 170' படத்தை இயக்குகிறார்.

'ஜெய் பீம்' படம் போன்று 'தலைவர் 170' படமும் ஏதேனும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'தலைவர் 170' படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக இருப்பதாகவும், ரஜினி இப்படத்தில் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விரைவில் முடிவுக்கும் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்..அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த நிலையில் தற்போது தலைவர் 170 திரைப்படத்தில் சூர்யாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்கவைக்க ஞானவேல் முயன்று வருகிறாராம். அத்துடன் சூர்யாவிற்கு அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ரஜினி சம்மதித்தாரா என்று இன்னும் உறுதியாகவில்லை. 

இதனிடையே தற்போது நடிகர் சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட லோகேஷ் கனகராஜ்! எந்த படம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News