Super Deluxe: வைரலாகும் விஜய் சேதுபதியின் டப்பிங் வீடியோ!!

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக விஜய் சேதுபதி டப்பிங் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : Feb 25, 2019, 05:56 PM IST
Super Deluxe: வைரலாகும்  விஜய் சேதுபதியின் டப்பிங் வீடியோ!! title=

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக விஜய் சேதுபதி டப்பிங் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஆரண்யக் காண்டம்’ திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முறையாக திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார்.

படத்தின் திரைகதை குறித்த தகவல்கள் ரகசியமாக காப்பாற்றப்பட்டு வருகின்றது. எனினும் விஜய் சேதுபதி ஷில்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது மட்டும் அனைவரும் அறிந்த விஷயம்.
 
கடந்த பிப்ரவரி 22ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனத்தை டப்பிங் செய்யும் போது விஜய் சேதுபதி எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதற்கான வீடியோ படக்குழு தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Trending News