எஸ்பி பாலசுப்பிரமண்யம் மரணம்....தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..!

பாடகரின் மறைவு பற்றிய செய்தி திரையுலகிற்கும் பாடகரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Sep 25, 2020, 02:30 PM IST
    1. பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்துவிட்டதாக வெங்கட் பிரபு ட்வீட் மூலம் அறிவித்துள்ளார்.
    2. கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் காலமானார்.
    3. நேற்று நடிகரும், எஸ்பிபியின் நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் மருத்துவமனை சென்று அவர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
எஸ்பி பாலசுப்பிரமண்யம் மரணம்....தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..! title=

பாடகர் (SP Balasubrahmanyam) மறைவு பற்றிய செய்தி திரையுலகிற்கும் பாடகரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பாடகருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சினிமா துறை உறுப்பினர்கள் தங்கள் சமூக ஊடக பக்கத்திற்கு போஸ்ட் செய்துள்ளனர். 

கமல்ஹாசன்- அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.

 

ALSO READ | அதிர்ச்சி! எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்!! வெங்கட் பிரபு ட்வீட்

 

 

 

பிரசன்னா- #RIPSPB SIR. YOU WILL BE DEEPLY MISSED SIR. WHAT A LEGEND! YOUR LEGACY WILL STAND STALL IN OUR HEARTS FOREVER. : #RIPSPB SIR. உங்களை ரொம்பவும் மிஸ் பண்ணுவோம். என்ன ஒரு லெஜண்ட். நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் வாழ்வீர்கள். 

 

 

ஆர்யா- மனமுடைந்துவிட்டேன். உங்களை மிஸ் பண்ணுவோம் சார். உங்களின் இசை மற்றும் நினைவுகளுக்கு நன்றி #SPBalasubrahmanyam #RIPSPB. 

 

 

வரலட்சுமி சரத்குமார்- இந்த ஆண்டு மோசமாகிக் கொண்டே போகிறது. மேலும் ஒரு லெஜண்ட் இறந்துவிட்டார். நீங்கள் எப்படி எங்களின் இதயங்களில் வாழ்வீர்களோ அதே போன்று உங்களின் குரல் என்றும் வாழும். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். 

 

 

 

அருண் விஜய்- நீங்கள் எப்பொழுதுமே எங்களுக்குள் இருப்பீர்கள்

 

 

 

ரம்யா கிருஷ்ணன்- ரொம்ப ஸ்பெஷலானவரை மறக்க முடியாது. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். எஸ்.பி.பி. சாரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

 

 

வெங்கட் பிரபு- #RIPSPB மதியம் 1:04 மணி

 

 

 

சின்மயி- ஒரு ஒலியின் முடிவு. நினைவுகளுக்கு நன்றி. ஒரு பாடகர் ஒரு அருமையான பாடகர், செயல், திரைப்பட செயல், தயாரித்தல், எழுதுதல் மற்றும் பலவற்றைக் காட்டியதுக்கு நன்றி. நீங்கள் வாழ்ந்தீர்கள், எப்படி! உங்கள் கலை ஏயோன்களுக்காக வாழும், நான் எப்போதும் உங்களை கொண்டாடுவேன்.

 

 

 

ஜெயம் ரவி- உங்கள் உற்சாகமான குரல் மூலம் நீங்கள் எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழ்வீர்கள் ஐயா மடிந்த கைகள் அமைதியாக இருங்கள் #SPBalasubrahmanyam ஐயா

 

 

ALSO READ | LIVE #RIPSPB: #SPB -யின் உடல் மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து செல்லப்படும்

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News