மாநாடு கூட்டியவருடன் இணையும் சிவகார்த்திகேயன்?... உற்சாகத்தில் ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 18, 2022, 10:35 AM IST
  • சிவகார்த்திகேயனுடன் இணையும் வெங்கட் பிரபு
  • வரிசையாக கமிட்டாகும் சிவகார்த்திகேயன்
 மாநாடு கூட்டியவருடன் இணையும் சிவகார்த்திகேயன்?... உற்சாகத்தில் ரசிகர்கள் title=

தமிழின் மினிமம் கியாரண்டி ஹீரோ என்ற பெயரை பெற்றிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இவர் கைவசம் தற்போது அயலான், ப்ரின்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். இந்தப் படங்கள் தவிர்த்து கமல் தயாரிப்பிலும் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சிவகார்த்திகேயன் படங்கள் வரிசையாக வெளியாகவிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | ’புஷ்பா’ நாயகனை இயக்கும் பிரபல தமிழ் இயக்குநர் - அறிவிப்பு விரைவில்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணையவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் தரப்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கவிருக்கிறார் எனவும், இந்த ஆண்டு இறுதியில் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

 

வெங்கட் பிரபு தற்போது தெலுங்கிலும், தமிழிலும் நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைப்பதாக கூறப்படும் இப்படம் நாக சைதன்யாவுக்கு முதல் நேரடி தமிழ் படம் ஆகும்.

சிவகார்த்திகேயன்

இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு அனேகமாக  சிவகார்த்திகேயன் படத்துக்கான வேலைகளை வெங்கட் பிரபு தொடங்குவார் என கருதப்படுகிறது.

மேலும் படிக்க | அடுத்தடுத்து பிரச்சினைகள்.. விஜய் 66 ஷூட்டிங் திடீர் நிறுத்தம்! - நடந்தது என்ன?

வெங்கட் பிரபு சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு படமானது 100 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. 100 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோவும், இயக்குநரும் இணையவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

[Source: V2cinemas]

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News